உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 17, 2026 12:15 AM

அ நிறம் | அளவு
நிதி நெருக்கடி மற்றும் சட்ட சிக்கல்களுக்கு மத்தியிலும், 'ஸ்பைஸ்ஜெட்' நிறுவன பங்குகள், தொடர்ந்து 2வது நாளாக 5 சதவீத 'அப்பர் சர்க்யூட்' அடித்து முதலீட்டாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. நேற்றைய வர்த்தகத்தில், இந்நிறுவன பங்குகள் 5 சதவீத உயர்வுடன் 14.14 ரூபாய் என்ற அளவை எட்டியன. கடந்த 9 வர்த்தக நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 42.40 சதவீதம் உயர்ந்துள்ளன.
சமீபத்திய ஏற்றம் சாதகமாக இருந்தாலும், கடந்த ஓராண்டு அடிப்படையில் பார்த்தால், இந்நிறுவன பங்கின் விலை 70.70 சதவீத சரிவிலேயே உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக இந்த பங்கில் முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் முதலீடு செய்து வருவது சந்தையில் பேசுபொருளாகியுள்ளது.
