sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 16, 2026 ,தை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 பங்கு ஆய்வு

/

 பங்கு ஆய்வு

 பங்கு ஆய்வு

 பங்கு ஆய்வு


ADDED : ஜன 16, 2026 01:32 AM

Google News

ADDED : ஜன 16, 2026 01:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபோர்ஜ் லிமிடெட்



உலகளாவிய டிஜிட்டல் சேவைகள், தீர்வுகளை வழங்கும் நிறுவனம் இது. கிட்டத்தட்ட 34,000க்கும் அதிகமான பணியாளர்களை கொண்டு, 25 நாடுகளில் 33 மையங்கள் வாயிலாக 'பார்ச்சூன் 500' நிறுவனங்கள் பலவற்றுக்கு தேவையான தீர்வுகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.

வங்கி மற்றும் நிதி சேவைகள், சுற்றுலா, போக்குவரத்து மற்றும் விருந்தோம்பல் என இரண்டு முக்கிய துறைகள், இந்த நிறுவனத்தின் மொத்த வருவாயில் 50 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன.

வங்கி நிதி சேவைகள்

பங்கு/மூலதன சந்தைகள், கிரெடிட்/டெபிட் கார்டுகள், பணம் செலுத்துதல், வர்த்தகர்களுக்கு வழங்கப்படும் கடன்கள் மற்றும் டிஜிட்டல் பேங்கிங் பிளாட்பார்ம்கள் போன்ற பிரிவுகளில் இந்த நிறுவனம் பெற்றுள்ள நிபுணத்துவம் காரணமாக, இந்த துறையில் இருந்து வரும் வருமானம், 2020 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் 25 சதவீத ஆண்டு வளர்ச்சியை எட்டியுள்ளது.

சுற்றுலா போக்குவரத்து

விமான நிறுவனங்கள் மற்றும் பயணங்கள் திட்டமிடுதல் தொழில்நுட்பத்தில் நீண்டகாலமாக தீர்வுகளை வழங்கி வரும் இந்நிறுவனம், கோவிட் பெருந்தொற்றுக்குப் பின், 13 சதவீத வருவாய் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

ஏ.ஐ., தொழில்நுட்ப முதலீடுகள்

ஏ.ஐ-., முதலீடு என்பது, இந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய துாணாக இருக்கிறது. இதில், இந்த நிறுவனம் வழங்கும் 'க்வாசர், போர்ஜ்-எக்ஸ் ஆகிய இரண்டு தளங்கள் மிக முக்கியமானவை.

சந்தை விரிவாக்கம்

சந்தையை விரிவாக்க, இந்த நிறுவனம் செயல்படும் துறை சார்ந்த நிறுவனங்களை கையகப்படுத்துவதை ஓர் உத்தியாக பயன்படுத்துகிறது.

'சிஜ்நிட்டி' எனும் தரப் பொறியியல் நுட்பத்துறையில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனத்தைக் கையகப்படுத்தி, அமெரிக்காவின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் தன் வணிகத்தை விரிவுபடுத்தியுள்ளது.

'என்கோரா' நிறுவனத்தை கையகப்படுத்தியதன் வாயிலாக மருந்துகள் உற்பத்தி, மருத்துவ தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் கால் பதித்துள்ளது.

வருவாய் உறுதி

நிறுவனத்தின் ஆர்டர் புக் 2020-ல் இருந்த நிலையை விட பல மடங்கு உயர்ந்து, தற்போது 160 கோடி டாலராக உள்ளது. இது, வருங்கால வருவாய் 80 சதவீதம் அளவுக்கு உறுதியானதைப் போன்ற நிலையைக் காட்டுகிறது. மேலும், நிறுவனத்தின் 90 சதவீத வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் ஆர்டர் தருபவர்களாக இருப்பதால், வருவாய் நிலைத்தன்மை இந்த நிறுவனத்துக்கு அதிகமாக உள்ளது.

நிதிநிலை மற்றும் ரிஸ்க்குகள்

வரும் 2026- - 28 காலகட்டத்தில், நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 'என்கோரா' ஒருங்கிணைப்புக்கு பிறகு, வருவாய் வளர்ச்சி அதிகரிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நிதி, சுற்றுலா துறைகளில் ஏற்படக்கூடிய மந்தநிலை, நிறுவனங்கள் தொழில்நுட்பத்திற்காக செலவிடும் தொகையைக் குறைப்பது ஆகியவற்றால் ஏற்படும் சவால்கள் போன்றவை, இந்த நிறுவனத்திற்கான சில முக்கிய ரிஸ்க்குகளாகும்.

ஒட்டுமொத்தமாக, கோபோர்ஜ் தன் வலுவான ஆர்டர் புக், ஏ.ஐ., சார்ந்த புதிய தீர்வு தளங்கள் மற்றும் கையகப்படுத்துதல்கள் வாயிலாக வலிமையான நிறுவனமாக உருவெடுத்துள்ளது. மேலே சொன்ன காரணங்களால், இந்நிறுவனத்தின் பங்குகளுக்கு 'வாங்கலாம்' என்ற மதிப்பீட்டை 'பிரபுதாஸ் லீலாதர்' நிறுவனம் வழங்கியுள்ளது.






      Dinamalar
      Follow us