போர் பதற்றம் குறைந்ததால் 'ஹாட்ரிக்' அடித்த பங்கு சந்தைகள்
போர் பதற்றம் குறைந்ததால் 'ஹாட்ரிக்' அடித்த பங்கு சந்தைகள்
UPDATED : ஏப் 22, 2026 02:08 AM
ADDED : ஏப் 22, 2026 01:57 AM

ஈரான் - அமெரிக்கா இடையிலான அமைதி பேச்சுவார்த்தை குறித்த சாதகமான எதிர்பார்ப்பு மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவற்றால் இந்திய பங்கு சந்தைகள் 3வது நாளாக நேற்று வலுவான ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
நேற்று சென்செக்ஸ் 753 புள்ளிகள் உயர்ந்து 79,273 புள்ளிகளிலும், நிப்டி 211 புள்ளிகள் அதிகரித்து 24,576 என்ற நிலையிலும் முடிவடைந்தன.
மேற்காசியாவில் நிலவும் அரசியல் பதற்றம் குறைய வாய்ப்புள்ளதாக கருதப்படுவதால் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கினர். சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை கிட்டத ் தட்ட ஒரு சதவீதம் குறைந்து வர்த்தகமானது. இது, நம் நாட்டின் பணவீக்கம் உயருமோ என்ற அச்சத்தை குறைத்தது.
'ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, ஹெச்.டி.எப்.சி., வங்கி, ஆக்சிஸ் வங்கி, ட்ரென்ட்' உள்ளிட்ட நிறுவன பங்குகள் அதிக லாபம் ஈட்டின. ஏப்ரல் 20ம் தேதி அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் 1,060 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறிய நிலையிலும், நேற்று உள்நாட்டு சூழல் சாதகமாக இருந்ததால் சந்தைகள் உயர்ந்தன.
