தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/பங்கு பரிந்துரை: 'சிம்பயோடெக் பார்மாலேப்': 'ஐ.சி.ஐ.சி.ஐ., டைரக்ட்' ஆய்வறிக்கை

பங்கு பரிந்துரை: 'சிம்பயோடெக் பார்மாலேப்': 'ஐ.சி.ஐ.சி.ஐ., டைரக்ட்' ஆய்வறிக்கை

பங்கு பரிந்துரை: 'சிம்பயோடெக் பார்மாலேப்': 'ஐ.சி.ஐ.சி.ஐ., டைரக்ட்' ஆய்வறிக்கை


UPDATED : அக் 03, 2026 02:43 AM

ADDED : அக் 02, 2026 10:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 02:43 AM ADDED : அக் 02, 2026 10:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உ லகளவில் 'ஸ்டீராய்டு' மருந்துகளுக்கான மூலப்பொருள் தயாரிப்பில் வலுவான சந்தை பங்கை கொண்டுள்ள, 'சிம்பயோடெக் பார்மாலேப்' நிறுவனம், பாரம்பரிய ஏ.பி.ஐ., தொழிலில் இருந்து அதிக மதிப்பு கொண்ட சிக்கலான ஊசி மருந்துகள் மற்றும் ஒப்பந்த உற்பத்தி தொழிலுக்கு வி ரிவடைந்து வருகிறது.

புதிய தொழில்களுக்காக ஏற்கனவே 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்துள்ள நிலையில், அடுத்த சில ஆண்டுகளில் வருவாய் மற்றும் லாப வளர்ச்சி வேகமெடுக்கலாம் என பங்கு தரகு நிறுவனமான, 'ஐ.சி.ஐ.சி.ஐ., டைரக்ட்' ஆய்வு தெரிவித்து உள்ளது.

இந்நிறுவன பங்குகளை வாங்கலாம் என்ற பரிந்துரையுடன் 12 மாத இலக்கு விலை 1,540 ரூபாய் என நிர்ணயித்துள்ளது.

Image 1625683

சாதகங்கள்



 ஸ்டீராய்டு மற்றும் ஹார்மோன் மருந்துகளுக்கான மூலப்பொருள் சந்தையில் வலுவான நிலை

 200க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், 40க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை

 நொதித்தல் மற்றும் வேதியியல் தயாரிப்பு வசதிகள் வாயிலாக ஒருங்கிணைந்த உற்பத்தி திறன்

 சிக்கலான ஊசி மருந்துகள் மற்றும் சி.டி.எம்.ஓ., தொழில்களில் புதிய முதலீடுகள்

 புதிய தயாரிப்புகள் மற்றும் நீண்டகால ஒப்பந்தங்கள் வாயிலாக வருவாய் வளர்ச்சிக்கு வாய்ப்பு

சவால்கள்



 புதிய தொழில்கள் எதிர்பார்த்த வேகத்தில் வளராவிட்டால், வருவாய் மற்றும் லாப வளர்ச்சி பாதிக்கப்படலாம்

 மருந்து உற்பத்தி துறையில் ஒழுங்குமுறை விதிகள் மற்றும் தர சோதனைகள் முக்கிய சவால்களாக உள்ளன

 சில முக்கிய வாடிக்கையாளர்களை அதிகம் சார்ந்திருப்பதால், பெரிய ஒப்பந்தங்கள் குறைந்தால் வருவாய் பாதிக்கப்படலாம்.

Image 1625683

பங்கு நிலவரம்


தற்போதைய விலை ரூ.1198.00
இலக்கு விலை ரூ.1,540
எதிர்பார்க்கப்படும் உயர்வு 28.50%
கால அளவு 12 மாதங்கள்
பரிந்துரை வாங்கலாம்
நிதிநிலை மற்றும் வளர்ச்சி
(தொகை ரூ. கோடியில்)
நிதி ஆண்டு வருவாய் எபிட்டா நிகர லாபம்
2024 - 25 751.60 201.80 96.90
2025 - 26 869.10 237.90 109.90
கணிப்பு
2026 - 27 1,016.40 287.70 140.20
2027 - 28 1,330.00 427.20 213.00
2028 - 29 1,628.30 542.40 276.70



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us