ADDED : செப் 17, 2025 10:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வே கமாக வளரும் இந்திய பங்குச் சந்தைகளில், வெளிநாட்டினர் எளிமையாக முதலீடு செய்யும் வகையில், 'டாடா இண்டியா டைனமிக் ஈக்விட்டி பண்டு' திட்டத்தை டாடா அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் குஜராத் கிப்ட் சிட்டியில் அறிமுகம் செய்துள்ளது.
சர்வதேச நிதி சேவை மையங்கள் ஆணையமான ஐ.எப்.எஸ்.சி.ஏ.,விடம் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த தி ட்டத்தில், வெளிநாட்டினர், குறைந்தபட்சம் 44,000 ரூபாயில் இருந்து முதலீடு செய்ய லாம்.
வெளிநாடு வாழ் முதலீட்டாளர்கள், இந்த பண்டில் ஈட்டும் வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டியதில்லை என்பது சாதகமான அம்சம். அவரவர் நாடுகளின் சட்டத்துக்கு ஏற்ப வரி செலுத்தவோ, விலக்கு பெறவோ முடியும் என்பதால், இந்த திட்டம், வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.