தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ 'டாடா' பங்குகள் 11% வரை சரிவு

 'டாடா' பங்குகள் 11% வரை சரிவு

 'டாடா' பங்குகள் 11% வரை சரிவு


UPDATED : செப் 19, 2026 04:42 AM

ADDED : செப் 19, 2026 04:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 19, 2026 04:42 AM ADDED : செப் 19, 2026 04:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'டா டா சன்ஸ்' நிறுவனத்தை பங்கு சந்தையில் பட்டியலிடுவது மற்றும் அதன் தலைவர் என்.சந்திரசேகரனின் பதவி காலத்தை நீட்டிப்பது தொடர்பாக, 'டாடா டிரஸ்ட்ஸ்' உடனான கருத்து வேறுபாடு தீவிரமடைந்துள்ளதால், டாடா குழும பங்குகள் நேற்று கடும் சரிவை சந்தித்தன. இதனால், டாடா குழும நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 30,000 கோடி ரூபாய் அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. நேற்றைய வர்த்தக முடிவில், டாடா கெமிக்கல்ஸ் பங்கு அதிகபட்சமாக 11.04 சதவீதம் சரிந்தது. அதேநேரம், 'டாடா கேபிட்டல், டாடா பவர், டாடா மோட்டார்ஸ்' ஆகிய பங்குகள் சரிவில் இருந்து சற்று மீண்டன.

Image 1620827


சரிவு கண்ட டாடா பங்குகள்

நிறுவனம் பங்குவிலை (ரூ.) (% சரிவு)

டாடா கெமிக்கல்ஸ் 693.25 (11.04)

டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் 702.35 (2.36%)

டாடா மோட்டார்ஸ் பாசஞ்சர் வெஹிகிள்ஸ் 303.80 (3.40% )

டி.சி.எஸ்., 2,105.00 (3.88% )

டாடா எலக்ஸி 3,266.70 (3.40%)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us