தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிஸிஸ்:  இறக்கம் நிற்பதற்கான சூழல் தெரிகிறது

டெக்னிக்கல் அனாலிஸிஸ்:  இறக்கம் நிற்பதற்கான சூழல் தெரிகிறது

டெக்னிக்கல் அனாலிஸிஸ்:  இறக்கம் நிற்பதற்கான சூழல் தெரிகிறது


UPDATED : டிச 11, 2025 01:23 AM

ADDED : டிச 11, 2025 01:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 11, 2025 01:23 AM ADDED : டிச 11, 2025 01:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு

Image 1506385

நிப்டி


சிறிது ஏற்றத்தில் துவங்கிய நிப்டி, 11 மணியளவில் இறக்கத்தை சந்திக்க ஆரம்பித்து, பின் அதிலிருந்து மீள முயற்சித்து தோல்வியடைந்து, நாளின் இறுதியில் 81 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில், 16-ம் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மிட்கேப் 100' குறியீடு, அதிகபட்சமாக 1.12 சதவிகித இறக்கத்துடனும்; 'நிப்டி100' குறியீடு குறைந்தபட்சமாக 0.30 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில், 5 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 13 குறியீடுகள் இறக்கத்துடனும்; 1 மாற்றம் ஏதுமின்றியும் நிறைவடைந்தன. இதில் 'நிப்டி மீடியா' குறியீடு அதிக பட்சமாக 0.48 சதவிகித ஏற்றத்துடனும் 'நிப்டி கன்ஸ்யூமர் டியுரபிள்ஸ்' குறியீடு அதிகபட்சமாக 1.72 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,200 பங்குகளில், 1,351 ஏற்றத்துடனும்; 1,752 இறக்கத்துடனும்; 97 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டியில் ஏற்றத்துக்கு தேவையான மொமெண்டம் மிகவும் குறைந்துவிட்டது. ஒரு சில டெக்னிக்கல் இண்டிகேட்டர்கள் தற்போதைய இறக்கம் நிறைவுக்கு வருவதற்கான சூழலை காட்டுகிற போதிலும், செய்திகள் ஆதரவாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே மீண்டும் ஏற்றத்திற்கான மொமெண்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போதைய சூழலில் 25,700 மற்றும் 25,500 என்ற லெவல்களிலேயே நல்லதொரு சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது.

Image 1506387

நிப்டி பேங்க்



ஆரம்பத்தில் சிறிய ஏற்றத்துடன் துவங்கிய நிப்டி பேங்க், 11 மணிக்கு மேல் இறங்க ஆரம்பித்து, பின் நாளின் இறுதியில் 261 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 'நிப்டி பேங்க்' தற்சமயம் காணும் இறக்கமானது, அது தன்னை நிலை நிறுத்திக்கொள்வதற்கான ஹெல்த்தி கரெக்ஷன் என்பதைப் போன்ற டெக்னிக்கல் சூழலே நிலவுகிறது. எனினும், ஏற்றத்திற்கான வேக நிலை குறைவாகவே இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு பார்த்தால், ஆதரவான செய்திகளே, நிப்டி பேங்க் குறியீட்டை மீண்டும் ஏற்றப்பாதையில் பயணிக்க வைப்பதற்கான வாய்ப்புள்ளது எனலாம்.

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.)

Image 1506389

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us