தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல அனாலிசிஸ்: 23,400 வலுவான ரெசிஸ்டென்ஸாக உருவாகியுள்ளது

டெக்னிக்கல அனாலிசிஸ்: 23,400 வலுவான ரெசிஸ்டென்ஸாக உருவாகியுள்ளது

டெக்னிக்கல அனாலிசிஸ்: 23,400 வலுவான ரெசிஸ்டென்ஸாக உருவாகியுள்ளது


UPDATED : மார் 28, 2026 02:43 AM

ADDED : மார் 28, 2026 01:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 28, 2026 02:43 AM ADDED : மார் 28, 2026 01:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆரம்பத்தில் இருந்தே இறக்கத்தில் நடைபெற்ற நிப்டி வர்த்தகம் நாளின் இறுதியில் 486 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ஸ்மால்கேப் 100' குறியீடு குறைந்தபட்சமாக 1.74 சதவீத இறக்கத்துடனும்; 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு, அதிகபட்சமாக 2.81 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி 500 ஹெல்த்கேர்' குறியீடு குறைந்தபட்சமாக 0.72 சதவீத இறக்கத்துடனும்; 'நிப்டி ஆட்டோ' குறியீடு அதிகபட்சமாக 2.82 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

Image 1554834


வர்த்தகம் நடந்த 3,388 பங்குகளில், 503 ஏற்றத்துடனும்; 2,813 இறக்கத்துடனும்; 72 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்தன. முக்கிய குறுகிய கால சராசரிகளுக்கு கீழேயும், குறைந்த மொமென்டத்துடனும் வர்த்தகமாவதால், டெக்னிக்கலாக நிப்டியில் இறக்கம் தொடர்வதற்கான வாய்ப்பே தென்படுகிறது. ஓரளவுக்கு ஓவர்சோல்டாக இருப்பதால், செய்திகள் பாசிட்டிவ்வாக இருந்தால், சிறியதொரு 'புல்பேக்' அல்லது 'கன்சாலிடேஷன்' நடக்க வாய்ப்புள்ளது. 23,800-க்கு மேலே செல்லாதவரை இறக்கம் நின்றுவிட்டது என்று கருதமுடியாது. செய்திகள் பாசிட்டிவ்வாக இருந்தாலும் கூட 23,400 என்ற ரெசிஸ்டென்ஸை தாண்ட மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us