sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிஸ்: 25,150 ரெசிஸ்டென்ஸாக மாறிக்கொண்டிருக்கிறது

டெக்னிக்கல் அனாலிசிஸ்: 25,150 ரெசிஸ்டென்ஸாக மாறிக்கொண்டிருக்கிறது

டெக்னிக்கல் அனாலிசிஸ்: 25,150 ரெசிஸ்டென்ஸாக மாறிக்கொண்டிருக்கிறது


UPDATED : ஜன 24, 2026 01:47 AM

ADDED : ஜன 24, 2026 01:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 24, 2026 01:47 AM ADDED : ஜன 24, 2026 01:46 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிறிய ஏற்றத்தில் ஆரம்பித்து, பின் சிறிது சிறிதாக இறங்க ஆரம்பித்து, மதியம் ஒரு மணிக்கு மேல் கணிசமாக இறங்கி, நாளின் இறுதியில் 241 புள்ளிகள் இறக்கத்துடன் நிப்டி நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ம் இறக்கத்துடன் நிறைவடைந்தன.

Image 1525706இவற்றில் 'நிப்டி100' குறியீடு குறைந்தபட்சமாக 1.12 சதவீத இறக்கத்துடனும்; 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 2.14 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ஐடி' குறியீடு குறைந்த பட்சமாக 0.17 சதவீத இறக்கத்துடனும்; 'நிப்டி ரியால்ட்டி' குறியீடு அதிகபட்சமாக 3.34 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,258 பங்குகளில், 879 ஏற்றத்துடனும்; 2,301 இறக்கத்துடனும்; 78 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டி, 200 நாள் சாராசரிக்கு கீழே நிறைவடைந்துள்ளது. தினசரி சார்ட் அடிப்படையில், நிப்டி சற்று கீழே செல்வதற்கான 'பியரிஷ் ப்ரேக் அவுட்' என்ற ரீதியில் தான் தற்சமயம் உள்ளது.

Image 1525707ஒரு சில டெக்னிக்கல்கள் 'ஓவர்சோல்டு' என்று காட்டுகின்றன என்பதை வைத்து பார்த்தாலுமே, ஏற்றம் வந்தால், 25,150 மற்றும் 25,250-ல் நல்லதொரு ரெசிஸ்டென்ஸை எதிர்க்கொள்வதற்கான வாய்ப்புள்ளது. வருகிற ஏற்றம், ஒரே பாய்ச்சலில் இந்த ரெசிஸ்டென்ஸ்களை தாண்டி மேலே செல்லாவிட்டால், கீழே 24,900 வரை சென்று திரும்புவதற்கான வாய்ப்புள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us