டெக்னிக்கல் அனாலிசிஸ்: குழப்பமான டெக்னிக்கல் சூழலே தென்படுகிறது
டெக்னிக்கல் அனாலிசிஸ்: குழப்பமான டெக்னிக்கல் சூழலே தென்படுகிறது
UPDATED : பிப் 21, 2026 09:20 AM
ADDED : பிப் 21, 2026 09:16 AM

காலையில் இருந்தே ஏற்றத்தில் நடைபெற்ற நிப்டி, நாளின் இறுதியில் 116 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில், 12 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 4 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
இவற்றில் 'நிப்டி100' குறியீடு அதிகபட்சமாக 0.49 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி ஸ்மால்கேப் 250' குறியீடு அதிகபட்சமாக 0.18 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 14 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 5 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,248 பங்குகளில், 1,520 ஏற்றத்துடனும்; 1,621 இறக்கத்துடனும்; 107 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டியின் மொமெண்டம் இண்டிகேட்டர்கள் (ஆர்.எஸ்.ஐ., 48-க்கு அருகிலும், பிளாட்டான எம்.ஏ.சி.டி.,யும்) பெரிய மாற்றம் வர வாய்ப்பு குறைவான அல்லது சற்று இறக்கம் வரக்கூடிய டெக்னிக்கல் சூழலையே காட்டுகின்றன.


