sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

டெக்னிக்கல் அனாலிசிஸ்: திசை தெரியா நிலை வரக்கூடும்

/

டெக்னிக்கல் அனாலிசிஸ்: திசை தெரியா நிலை வரக்கூடும்

டெக்னிக்கல் அனாலிசிஸ்: திசை தெரியா நிலை வரக்கூடும்

டெக்னிக்கல் அனாலிசிஸ்: திசை தெரியா நிலை வரக்கூடும்


UPDATED : பிப் 14, 2026 11:48 AM

ADDED : பிப் 14, 2026 11:42 AM

Google News

UPDATED : பிப் 14, 2026 11:48 AM ADDED : பிப் 14, 2026 11:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரம்பத்தில் இருந்தே இறக்கத்தில் நடைபெற்ற நிப்டி, நாளின் இறுதியில் 336 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ம் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி 100' குறியீடு குறைந்தபட்சமாக 1.34 சதவீத இறக்கத்துடனும்; 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 1.88 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.Image 1535979

19 துறை சார்ந்த குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி பி.எஸ்.யு., பேங்க்' குறியீடு குறைந்தபட்சமாக 0.68 சதவீத இறக்கத்துடனும்; 'நிப்டி மெட்டல்' குறியீடு, அதிகபட்சமாக 3.31 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,248 பங்குகளில், 762 ஏற்றத்துடனும்; 2,387 இறக்கத்துடனும்; 99 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டி மீண்டும் கரெக் ஷனுக்குள் சென்று விட்ட நிலைமை, டெக்னிக்கலாக தென்படுகிறது. 20 மற்றும் 50 நாள் சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) கீழே நிறவடைந்துள்ளது.Image 1535980

25,200-ல் இருக்கும் 200 நாள் இ.எம்.ஏ-.,தான் அடுத்ததாக இருக்கும் ஒரு நல்ல சப்போர்ட் லெவல் என்ற நிலையே தற்போது உள்ளது. மொமெண்டம் இண்டிகேட்டர்கள் நியுட்ரல் முதல் சிறிதளவு பியரிஷ் என்ற நிலையையே காட்டுவதால், திசைதெரியா நிலையையோ, அல்லது இறக்கத்தையோ எதிர்பார்க்கலாம்.






      Dinamalar
      Follow us