தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிஸ் : சாதகமான செய்திகள் வந்தால் மட்டுமே ஏற்றம்

டெக்னிக்கல் அனாலிசிஸ் : சாதகமான செய்திகள் வந்தால் மட்டுமே ஏற்றம்

டெக்னிக்கல் அனாலிசிஸ் : சாதகமான செய்திகள் வந்தால் மட்டுமே ஏற்றம்


UPDATED : செப் 04, 2026 04:25 AM

ADDED : செப் 04, 2026 03:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 04, 2026 04:25 AM ADDED : செப் 04, 2026 03:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நேற்று 83 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கிய நிப்டி 110 புள்ளிகள் வரை உயர்ந்தது. பின்னர் இறங்க ஆரம்பித்து நாளின் இறுதியில் 41 புள்ளிகள் குறைந்து முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18-ல் 15 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 3 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி ஸ்மால்கேப்50' குறியீடு அதிக பட்சமாக 1.24 சதவீத உயர்வுடனும், 'நிப்டி100' குறியீடு அதிக பட்சமாக 0.11 சதவீத சரிவுடனும் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 12 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 9 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி ரியால்ட்டி' குறியீடு அதிக பட்சமாக 2.58 சதவீத ஏற்றத்துடனும், நிப்டி ஐ.டி., குறியீடு அதிக பட்சமாக 0.85 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,628 நிறுவனங்களின் பங்குகளில் 2,207 ஏற்றத்துடனும்; 1,311 இறக்கத்துடனும்; 110 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.

நிப்டி பலவீனமான டெக்னிக்கல் சூழலிலேயே நிறைவடைந்துள்ளது. முக்கிய குறுகிய மற்றும் நடுத்தர கால சராசரிகள் (இ.எம்.ஏ.,) அனைத்திற்கும் கீழே நிறைவடைந்துள்ள நிப்டியின் ஆர்.எஸ்.ஐ., 37.11 என்ற அளவிலும், எம்.ஏ.சி.டி.,--69.36 என்ற அளவிலும் இருப்பது பலவீனத்தை உறுதிசெய்வதாய் இருக்கிறது.

Image 1615745


இருப்பினும் ஸ்டோக்காஸ்ட்டிக் நிலைமை சிறு ஏற்றம் வருவதற்கு சாதகமாக இருப்பது ஒன்றுதான் தற்போதைய டெக்னிக்கல் சூழலில் ஆதரவான விஷயமாக இருக்கிறது. 23,800 உடனடி சப்போர்ட்டாக இருக்கிறது. இதனை தாண்டி இறங்கினால் 23,700-23,600 வரை செல்ல வாய்ப்புள்ளது. 23,953 உடனடி ரெசிஸ்டென்ஸாக இருக்கிறது.

இதனை தாண்டி ஏற்றம் கண்டால் 24,083-24,190 என்ற லெவல்கள் வரை செல்ல டெக்னிக்கலாக வாய்ப்புள்ளது. ஏற்றம் காண்பதற்கான வாய்ப்பினை காட்டும் டெக்னிக்கல் விஷயங்கள் மிகவும் குறைவாக இருப்பதால் இறக்கத்திற்கான வாய்ப்பே அதிகமாக இருக்கிறது எனக்கொள்ளலாம். ஏற்றத்திற்கு ஆதரவாக செய்திகள் வந்தால் மட்டுமே இந்த நிலைமை மாறும் என எதிர்பார்க்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us