டெக்னிக்கல் அனாலிசிஸ் செய்திகள் சாதகமாக இருந்தால் மட்டுமே ஏற்றம்
டெக்னிக்கல் அனாலிசிஸ் செய்திகள் சாதகமாக இருந்தால் மட்டுமே ஏற்றம்
UPDATED : செப் 12, 2025 01:52 AM
ADDED : செப் 12, 2025 01:51 AM

நிப்டி
நா ளின் ஆரம்பத்தில், சிறியதொரு இறக்கத்துடன் 24,991- புள்ளிகளில் துவங்கிய நிப்டி, நண்பகல் 12 மணி வரையில் பெரிய அளவிலான ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் இருந்தது. அதன் பின்னர் ஏற ஆரம்பித்து, 25,037 என்ற உச்சத்தை தொட்டுவிட்டு, பின் இறங்கி, கடைசியில் 32 புள்ளிகள் ஏற்றத்துடன் 25,005 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிப்டியின் எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9):40.70 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12, சி.எல்.,):0.15 என இருப்பது, சிறிதளவு ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்புள்ளது என்பதையே காட்டுகிறது. 24,975 என்ற எல்லைக்கு மேலே சென்று தொடர்ந்து வர்த்தகம் நடந்தால் மட்டுமே, ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது எனலாம். தற்போதைய டெக்னிக்கல் அமைப்பின் படி, நிப்டி 24,950, 24,895 மற்றும் 24,865 என்ற நிலைகளை ஆதரவு நிலைகளாகக் கொண்டும், 25,050, 25,090 மற்றும் 25,130 என்ற எல்லைகளை தடுப்பு நிலைகளாகக் கொண்டும் செயல்பட வாய்ப்புள்ளது.
![]() |
நிப்டி பேங்க்
நா ளின் ஆரம்பத்தில், சிறியதொரு இறக்கத்துடன் 54,413 புள்ளிகளில் ஆரம்பித்த நிப்டி பேங்க், 12 மணி வரையில் பெரிய ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் இருந்து, அதன் பின்னர் ஏற ஆரம்பித்து, 54,757 என்ற உச்சத்தை தொட்டது. அதன்பின் நாளின் இறுதியில் 133 புள்ளிகள் ஏற்றத்துடன் 54,669 புள்ளிகளில் நிறைவடைந்தது.
![]() |
எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9): 74.50, ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14,சி.எல்.,) : 47.42 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12,சி.எல்.,): -0.85 என்ற அளவில் இருக்கிறது. இந்த நிலைமையில் ஏற்றம் உருவாக 54,610 என்ற அளவுக்கு கீழே போகாமல், தொடர்ந்து இருந்துவந்தால், நிப்டி பேங்க் ஏற்றத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. 54,460; 54,255, மற்றும் 54,120 போன்ற நிலைகளை ஆதரவு நிலைகளாகக் கொண்டும் 54,815; 54,970 மற்றும் 55,105 என்ற நிலைகளை தடுப்பு நிலைகளாகக் கொண்டும் நிப்டி பேங்க் செயல்பட வாய்ப்புள்ளது.


