sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

டெக்னிக்கல் அனாலிசிஸ்: பெரிய நகர்வுகளுக்கான வாய்ப்புகள் குறைவாகவே தெரிகிறது

/

டெக்னிக்கல் அனாலிசிஸ்: பெரிய நகர்வுகளுக்கான வாய்ப்புகள் குறைவாகவே தெரிகிறது

டெக்னிக்கல் அனாலிசிஸ்: பெரிய நகர்வுகளுக்கான வாய்ப்புகள் குறைவாகவே தெரிகிறது

டெக்னிக்கல் அனாலிசிஸ்: பெரிய நகர்வுகளுக்கான வாய்ப்புகள் குறைவாகவே தெரிகிறது


UPDATED : பிப் 27, 2026 07:50 AM

ADDED : பிப் 27, 2026 07:46 AM

Google News

UPDATED : பிப் 27, 2026 07:50 AM ADDED : பிப் 27, 2026 07:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நண்பகல் வரை சிறிய ஏற்றத்துடன் நடைபெற்ற நிப்டி வர்த்தகம், அதன்பின் இறக்கத்தை சந்தித்து, 2:45 மணியளவில் இறக்கத்தில் இருந்து மீண்டு நாளின் இறுதியில் 14 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் 14 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 2 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மிட்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 0.69 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 0.09 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.Image 1541907

19 துறை சார்ந்த குறியீடுகளில், 15 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 4 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ஹெல்த்கேர்' குறியீடு அதிகபட்சமாக 1.24 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி மீடியா' குறியீடு அதிகபட்சமாக 0.68 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,257 பங்குகளில், 1,686 ஏற்றத்துடனும்; 1,455 இறக்கத்துடனும்; 116 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி 20 மற்றும் 50 நாள் சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) கீழேயே நிறைவடைந்துள்ளது. மொமெண்டம் இண்டிகேட்டர்கள் இன்னும் ஏற்றத்திற்கான நகர்வுகளை உறுதியாக காட்டவில்லை.

Image 1541908தற்போதைய டெக்னிக்கல் நிலைமையில் பெரிய அளவிலான மாறுதல்களை எதிர்கொள்ளாமல், 25,350 முதல் 25,850 வரையிலான எல்லைக்குள் நிப்டி பயணிப்பதற்கான வாய்ப்பே தென்படுகிறது.






      Dinamalar
      Follow us