தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிஸ் :24,250க்கு அருகே கன்சாலிடேஷன் நடக்கலாம்

டெக்னிக்கல் அனாலிசிஸ் :24,250க்கு அருகே கன்சாலிடேஷன் நடக்கலாம்

டெக்னிக்கல் அனாலிசிஸ் :24,250க்கு அருகே கன்சாலிடேஷன் நடக்கலாம்


UPDATED : ஏப் 17, 2026 12:38 AM

ADDED : ஏப் 17, 2026 12:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 17, 2026 12:38 AM ADDED : ஏப் 17, 2026 12:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நண்பகல் வரை ஏற்றம் அதன் பின், 2:45 மணிவரை இறக்கம் பின், 3 மணியளவில் சிறிய ஏற்றம் என, பல மாறுதல்களை கண்ட நிப்டி, நாளின் இறுதியில் 34 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், நிப்டி100 குறியீடு குறைந்தபட்சமாக, 0.07 சதவீத ஏற்றத்துடனும், நிப்டி மைக்ரோகேப் 250 குறியீடு அதிகபட்சமாக 1.18 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 13 குறியீடுகள் ஏற்றத்துடனும், 6 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், நிப்டி பிரைவேட் பேங்க் குறியீடு அதிகபட்சமாக 0.56 சதவீத இறக்கத்துடனும், நிப்டி மெட்டல் குறியீடு அதிகபட்சமாக 1.53 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.

Image 1565050
Image 1565051
Image 1565052
Image 1565053
Image 1565054


வர்த்தகம் நடந்த 3,324 பங்குகளில், 2,145 ஏற்றத்துடனும் 1,087 இறக்கத்துடனும், 92 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டியால் 24,200ஐ (கிட்டத்தட்ட 50 நாள் இஎம்ஏ) தாண்டி நிறைவடைய முடியவில்லை. அதேநேரம், மொமெண்டம் சற்றே அதிகரித்து இருக்கிறது. ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்பு இருக்கிற போதிலும் ஸ்டோக்காஸ்ட்டிக் ஓவர்பாட்டாக இருப்பதால், மேலே சென்றாலுமே செல்லும் வேகம் சற்று குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. தற்போதைய டெக்னிக்கல் நிலைமையில் 24,250க்கு அருகே கன்சாலிடேஷன் நடக்க வாய்ப்புள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us