டெக்னிக்கல் அனாலிசிஸ் : சாதகமான செய்திகள் வந்தால் மேலும் உயர வாய்ப்பு
டெக்னிக்கல் அனாலிசிஸ் : சாதகமான செய்திகள் வந்தால் மேலும் உயர வாய்ப்பு
UPDATED : மே 15, 2026 12:40 AM
ADDED : மே 15, 2026 12:36 AM

நிப்டி
நேற்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் துவக்கிய நிப்டி, வர்த்தகத்தின் இறுதியில் 277 புள்ளிகள் அதிகரித்து முடிந்தது. 18 பரந்த சந்தை குறியீடுகளில் 17 உயர்வுடனும்; 1 மட்டும் குறைந்தும் முடிந்தன. இவற்றில், 'நிப்டி மிட்கேப் 150' குறியீடு அதிகபட்சமாக 1.18 சதவீதமும், 'நிப்டி ஸ்மால்கேப் 250' குறியீடு குறைந்தபட்சமாக 0.03 சதவீதமும் உயர்ந்து நிறைவடைந்தன.
'நிப்டி ஸ்மால்கேப் 100' குறியீடு மட்டும் 0.01 சதவீத சரிவுடன் நிறைவடைந்தது. 21 துறை சார்ந்த குறியீடுகளில், 19 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 2 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி பார்மா' குறியீடு அதிகபட்சமாக 2.74 சதவீதம் உயர்ந்தும், நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 1.19 சதவீதம் வீழ்ச்சியடைந்தும் காணப்பட்டன.
![]() |
வர்த்தகம் நடந்த 3,369 நிறுவனங்களின் பங்குகளில் 1,723 அதிகரித்தும்; 1,537 சரிந்தும், 109 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி இன்னமும் முக்கிய சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) கீழேதான் நிறைவடைந்துள்ளது. குறுகியகால டிரெண்ட் பலவீனமாக இருந்தாலும், புல்பேக் முயற்சி தொடரவே செய்கிறது.
ஆர்.எஸ்.ஐ., மற்றும் எம்.ஏ.சி.டி., நெகட்டிவ்வாக இருப்பது, சந்தையில் இன்னும் வாங்கும் போக்கு அதிகரிக்கவில்லை என்பதையே காட்டுவதால், பலவீனம் முழுமையாக போய்விடவில்லை எனலாம்.
தற்போதைய சூழலில் 23,500-ல் முக்கிய சப்போர்ட்டும், 23,900-ல் முக்கிய ரெசிஸ்டென்ஸும் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் புல்பேக் ராலி இன்னும் சற்றுதுாரம் செல்வதற்கான வாய்ப்பு இருந்தாலும், செய்திகள் சார்ந்த திடீர் நகர்வுகளுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

