sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 27, 2026 ,சித்திரை 14, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

டெக்னிக்கல் அனாலிசிஸ்: 24,800க்கு மேலே வெகு சுலபமாக செல்லக்கூடும்

/

டெக்னிக்கல் அனாலிசிஸ்: 24,800க்கு மேலே வெகு சுலபமாக செல்லக்கூடும்

டெக்னிக்கல் அனாலிசிஸ்: 24,800க்கு மேலே வெகு சுலபமாக செல்லக்கூடும்

டெக்னிக்கல் அனாலிசிஸ்: 24,800க்கு மேலே வெகு சுலபமாக செல்லக்கூடும்


UPDATED : ஏப் 22, 2026 02:12 AM

ADDED : ஏப் 22, 2026 02:03 AM

Google News

UPDATED : ஏப் 22, 2026 02:12 AM ADDED : ஏப் 22, 2026 02:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்றத்தில் ஆரம்பித்து பின்னர் தொடர்ந்து ஏற்றம் கண்ட நிப்டி நாளின் இறுதியில் 211 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் நிப்டி மிட்கேப்50 குறியீடு குறைந்தபட்சமாக 0.47 சதவீத ஏற்றத்துடனும், நிப்டி மைக்ரோகேப் 250 குறியீடு அதிகபட்சமாக 1.06 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.

19 துறை சார்ந்த குறியீடுகளில் 17 குறியீடுகள் ஏற்றத்துடனும் 2 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் நிப்டி பார்மா குறியீடு அதிகபட்சமாக 0.08 சதவீத இறக்கத்துடனும், நிப்டி எப்.எம்.சி.ஜி., குறியீடு அதிகபட்சமாக 2.55 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.

Image 1567779


வர்த்தகம்

நடந்த 3,436 பங்குகளில் 2,088 ஏற்றத்துடனும் 1,245 இறக்கத்துடனும், 103 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. 14, 21 மற்றும் 50 நாள் சராசரிகளுக்கு (இஎம்ஏ) மேலே நிப்டி நிறைவடைந்துள்ளது. மொமெண்டம் இண்டிகேட்டர்கள் இன்னும் ஏற்றத்திற்கு வாய்ப்பு இருப்பதையே காட்டுகின்றது.

அதேநேரம், ஆசிலேட்டர்கள் ஓவர் பாட் நிலைமைக்குள் சென்றுகொண்டு இருக்கின்றன. டெக்னிக்கலாக இது கன்சாலிடேஷன் நடக்காமல் அடுத்த கட்ட பெரிய ஏற்றத்திற்கு வாய்ப்பு இல்லை என்பதை காட்டுகின்றது. இந்த சூழ்நிலையில் 24,800 வரை மெள்ளமெள்ள ஏற்றம் கண்டு அதன் பின்னால் சிறிய இறக்கம் (புல்பேக்) வந்த பின்னரே அடுத்த கட்ட ஏற்றம் வருவதற்கான வாய்ப்புள்ளது. அதேநேரம், செய்திகள் மிகவும் சாதகமாக இருந்தால் 24,800க்கு மேலே வெகு சுலபமாக சென்று விடக்கூடும்.






      Dinamalar
      Follow us