தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிஸ் : பக்கவாட்டு நகர்வோ அல்லது இறக்கமோ வரக்கூடும்

டெக்னிக்கல் அனாலிசிஸ் : பக்கவாட்டு நகர்வோ அல்லது இறக்கமோ வரக்கூடும்

டெக்னிக்கல் அனாலிசிஸ் : பக்கவாட்டு நகர்வோ அல்லது இறக்கமோ வரக்கூடும்


UPDATED : செப் 02, 2026 01:55 AM

ADDED : செப் 02, 2026 01:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2026 01:55 AM ADDED : செப் 02, 2026 01:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நேற்று இறக்கத்துடனே வர்த்தகத்தை தொடங்கிய நிப்டி, நாளின் இறுதியில் 24 புள்ளிகள் குறைந்து முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18-ம் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி ஸ்மால்கேப்250' குறியீடு குறைந்தபட்சமாக 0.05 சதவீதமும், 'நிப்டி மிட்கேப்100' குறியீடு அதிகபட்சமாக 1.39 சதவீதமும் சரிந்து முடிவடைந்தது. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 5 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 16 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில், நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 0.98 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி மிட்ஸ்மால் பைனான்சியல் சர்வீசஸ்' குறியீடு அதிகபட்சமாக 1.98 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,649 நிறுவனங்களின் பங்குகளில் 1,344 ஏற்றத்துடனும்; 2,194 இறக்கத்துடனும்; 111 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. மறுபடியும் நிப்டி முக்கிய சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) கீழே நிறைவடைந்துள்ளது. ஆர்.எஸ்.ஐ., 42.86 என்ற அளவிலும், எம்.ஏ.சி.டி., -34.04 என்ற அளவிலும் ஆர்.ஓ.சி., -1.27 என்ற அளவிலும் இருப்பது இறக்கம் வரவோ அல்லது பெரிய மாற்றம் இல்லாது வர்த்தகமாகவோ வாய்ப்பு உள்ளது என்பதையே காட்டுகிறது.

Image 1614984


ஸ்டோக்காஸ்ட்டிக் 26.51 என்ற அளவில் இருப்பதால் சற்று ஓவர் சோலடு நிலைமைக்கு அருகில் இருக்கும் நிப்டியில் சிறியதொரு ஏற்றம் வருவதற்கு வாய்ப்புள்ளது என கூறலாம். 24,000--23,950 என்ற லெவலில் உடனடி சப்போர்ட் இருக்கிறது. 23,950-க்கு கீழே சென்றால் 23,800 வரை செல்ல வாய்ப்புள்ளது. 24,165-ல் உடனடி ரெசிஸ்டென்ஸ் இருக்கிறது. இதை தாண்டி மேலே சென்றால் 24,230 வரை செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

நிப்டி 24,230-க்கு மேலே தொடர்ந்து நிலைத்திருக்கும் பட்சத்தில் 24,360 வரை செல்லக்கூடும். டெக்னிக்கல் சூழலை வைத்துப் பார்த்தால் பக்கவாட்டு நகர்வோ அல்லது இறக்கமோ வரக்கூடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us