தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டியில் டெக்னிக்கல் மீட்சிக்கான வாய்ப்பு குறைவு

டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டியில் டெக்னிக்கல் மீட்சிக்கான வாய்ப்பு குறைவு

டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டியில் டெக்னிக்கல் மீட்சிக்கான வாய்ப்பு குறைவு


UPDATED : செப் 25, 2026 04:33 AM

ADDED : செப் 25, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 25, 2026 04:33 AM ADDED : செப் 25, 2026 04:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நேற்று 225 புள்ளிகள் இறக்கத்துடன் ஆரம்பித்த நிப்டி, தொடர்ந்து இறக்கம் கண்டு நாளின் இறுதியில் 383 புள்ளிகள் வீழ்ச்சியுடன் முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 17ம் இறக்கத்துடன் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி ஸ்மால்கேப் 250' குறியீடு குறைந்த பட்சமாக 1.39 சதவீத சரிவுடனும், 'நிப்டிமிட்கேப்50' குறியீடு அதிக பட்சமாக 2.57 சதவீத சரிவுடனும் முடிவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி ரீட்ஸ் & ரியால்ட்டி' குறியீடு குறைந்த பட்சமாக 0.39 சதவீத இறக்கத்துடனும், 'நிப்டி மிட்ஸ்மால் பைனான்சியல் சர்வீசஸ்' குறியீடு அதிக பட்சமாக 4.37 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,629 நிறுவனங்களின் பங்குகளில் 942 ஏற்றத்துடனும்; 2,586 இறக்கத்துடனும்; 101 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.

நிப்டி மீண்டும் பியரிஷ் டெக்னிக்கல் அமைப்புக்குள் சென்றுவிட்டது. 14, 21, 50, 100 மற்றும் 200 நாள் சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) கீழே நிறைவடைந்துள்ளது. எம்.ஏ.சி.டி., (-229.76) சிக்னல் லைனுக்கு (-211.54) கீழே உள்ளது. ஆர்.எஸ்.ஐ., (30.97) சற்று ஓவர் சோல்டு நிலைக்கு அருகே சென்றுள்ளது.

Image 1622786


ஆர்.ஓ.சி., (-3.01) நெகட்டிவ் மொமென்டம் இருப்பதை காட்டுகிறது. பாஸ்ட் ஸ்டோக்கஸ்ட்டிக் %கே 3.83-ல் இருப்பது குறுகிய கால அளவீட்டில் அதிக அளவில் ஓவர் சோல்டு என்பதை காட்டுகிறது. இதனால் சிறியதொரு டெக்னிக்கல் மீட்சி வர வாய்ப்புள்ளது.

ஆனாலும் இதை உறுதியென்று சொல்வதற்கான மற்ற விஷயங்கள் சாதகமாக இல்லை. 23,000-22,900 லெவல்களில் உடனடி சப்போர்ட் இருக்கிறது. இந்த அளவில் ஆதரவு கிடைத்தால், மீண்டும் 23,445-ஐ நோக்கிய மீட்சி நடக்கக்கூடும்.

நிப்டி 22,900-த்திற்கு கீழே சென்றால் 22,500-22,600 வரை செல்வதற்கான சாத்தியக்கூறுகள் டெக்னிக்கலாக இருக்கவே செய்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us