தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ டெக்னிக்கல் அனாலிசிஸ்: சிறிய டெக்னிக்கல் மீட்சி வருவதற்கு வாய்ப்புள்ளது

 டெக்னிக்கல் அனாலிசிஸ்: சிறிய டெக்னிக்கல் மீட்சி வருவதற்கு வாய்ப்புள்ளது

 டெக்னிக்கல் அனாலிசிஸ்: சிறிய டெக்னிக்கல் மீட்சி வருவதற்கு வாய்ப்புள்ளது


UPDATED : செப் 16, 2026 04:14 AM

ADDED : செப் 16, 2026 03:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 16, 2026 04:14 AM ADDED : செப் 16, 2026 03:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நேற்று ஆரம்பத்தில் முந்தைய நாள் நிறைவை விட 178 புள்ளிகள் அதிகரித்து தொடங்கிய நிப்டி பின்னர் வேகமான இறக்கத்தை சந்தித்தது. பின்னர் சீராக இறக்கத்தை கண்டு நாளின் இறுதியில் 279 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 17ம் இறக்கத்துடன் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி100' குறியீடு குறைந்தபட்சமாக 1.44 சதவீத இறக்கத்துடனும், 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 3.27 சதவீத சரிவுடனும் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 1 குறியீடு மட்டும் ஏற்றத்துடனும்; ஏனைய 20 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில், நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 2.19 சதவீத உயர்வுடனும், 'நிப்டி ரியால்ட்டி' குறியீடு அதிகபட்சமாக 4.04 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. என்.எஸ்.இ., யில் வர்த்தகம் நடந்த 3,687 நிறுவனங்களின் பங்குகளில் 754 ஏற்றத்துடனும்; 2,824 இறக்கத்துடனும்; 109 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.

பல முக்கிய சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) கீழே நிப்டி நிறைவடைந்துள்ளது. சமீபத்தில் நிப்டி கண்ட குறைந்த நிறைவு இதுவாகும். ஆரம்பத்திற்கும் இறுதிக்கும் இடையே 457 புள்ளிகள் வீழ்ச்சியை நிப்டி கண்டதால் பெரியதொரு பியரிஷ் கேண்டில் வந்துள்ளது.

இதுதவிர, நாளின் குறைந்த நிலையும் நாளின் இறுதி நிலையும் ஒரே அளவாக இருந்தது நாள் முழுதுமே சந்தையில் விற்பனை தொடர்ந்து இருந்ததையே காட்டுகிறது. இவை அனைத்தும் நிப்டி பலவீனமாக இருப்பதையே குறிக்கின்றன.

Image 1619707


தற்போதைய டெக்னிக்கல் சூழலில் 23,118-ல் முக்கிய சப்போர்ட் இருக்கிறது. 23,118-க்கு கீழே சென்றால் 22,955 வரை இறங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆர்.எஸ்.ஐ., மற்றும் ஸ்டோக்காஸ்ட்டிக் இண்டிக்கேட்டர்கள் நிப்டி அதிகமாக ஓவர்சோல்டு நிலையில் இருப்பதை காட்டுவதால் சிறியதொரு டெக்னிக்கல் ஏற்றம் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை முழுமையாக மறுக்க முடியாது.

அப்படி ஒரு ஏற்றம் வந்தாலுமே 23,450-க்கு மேலே சென்றால் மட்டுமே குறுகிய கால மீட்சி தொடங்குவதாக கொள்ளலாம். இதற்கு மேலே சென்றால் 23,575 மற்றும் 23,787-ல் அடுத்தடுத்த ரெசிஸ்டென்ஸ் இருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us