டெக்னிக்கல் அனாலிசிஸ் : எச்சரிக்கையுடன் குறுகிய வரம்புக்குள் நகரக்கூடும்
டெக்னிக்கல் அனாலிசிஸ் : எச்சரிக்கையுடன் குறுகிய வரம்புக்குள் நகரக்கூடும்
UPDATED : ஜன 23, 2026 04:12 AM
ADDED : ஜன 23, 2026 04:10 AM

ஏற்றத்தில் ஆரம்பித்து மதியம் ஒரு மணியளவில் ஏறிய புள்ளிகளை, கிட்டத்தட்ட அப்படியே இழந்து இரண்டு மணிக்கு மேல் ஏற்றம் கண்டு, நாளின் இறுதியில் 132 புள்ளிகள் உயர்வுடன் நிப்டி நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ம் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 1.56 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி100' குறியீடு குறைந்தபட்சமாக 0.62 சதவிகித ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 17 ஏற்றத்துடனும்; 2 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 'நிப்டி கன்ஸ்யுமர் டியுரபிள்ஸ்' குறியீடு, அதிகபட்சமாக 0.87 சதவிகித இறக்கத்துடனும்; 'நிப்டி மீடியா' குறியீடு அதிகபட்சமாக 2.39 சதவிகித ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வர்த்தகம் நடந்த 3,266 பங்குகளில், 2,343 ஏற்றத்துடனும்; 847 இறக்கத்துடனும்; 76 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டி 200 நாள் சராசரிக்கு மேலே சென்று விட்ட போதிலும், கரெக் ஷன் முடிந்துவிட்டது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. 'ஓவர்சோல்டு ஆக இருக்கும் இண்டிகேட்டர்கள் ஏறுவதற்கு வாய்ப்புள்ளது என்று காட்டினாலும், செய்திகள் சாதகமாக இல்லாவிடில், இது சாத்தியமாக வாய்ப்பில்லை. தற்போதைய சூழலில் 25,800 என்ற லெவலை தாண்டிச் சென்றால் மட்டுமே ஏற்றம் தொடரும் என்று உறுதியாகக் கூறமுடியும். 25,150-க்கு கீழே போனால், 25,000 வரை சென்று திரும்புவதற்கான வாய்ப்புள்ளது.






