தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிஸ் : செய்திகளே நிப்டியின் நகர்வை தீர்மானிக்கும்

டெக்னிக்கல் அனாலிசிஸ் : செய்திகளே நிப்டியின் நகர்வை தீர்மானிக்கும்

டெக்னிக்கல் அனாலிசிஸ் : செய்திகளே நிப்டியின் நகர்வை தீர்மானிக்கும்


UPDATED : ஜூன் 11, 2026 02:32 AM

ADDED : ஜூன் 11, 2026 02:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 11, 2026 02:32 AM ADDED : ஜூன் 11, 2026 02:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிப்டி

நேற்று 102 புள்ளிகள் உயர்வுடன் ஆரம்பித்த நிப்டி, நாளின் இறுதியில் 27 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது. 18 பரந்த சந்தை குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி 100' குறியீடு குறைந்தபட்சமாக 0.31 சதவீதமும், 'நிப்டி மிட்கேப் 100' குறியீடு அதிகபட்சமாக 1.49 சதவீதம் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 3 குறியீடு ஏற்றத்துடனும்; 18 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில், நிப்டி எப்.எம்.சி.ஜி., குறியீடு அதிகபட்சமாக 1.05 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி மீடியா' குறியீடு அதிகபட்சமாக 2.36 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,378 நிறுவனங்களின் பங்குகளில் 1,035 ஏற்றத்துடனும்; 2,258 இறக்கத்துடனும்; 85 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.

நிப்டி 10 மற்றும் 20 நாள் (இ.எம்.ஏ.,) சராசரிகளுக்கு கீழே நிறைவடைந்திருப்பது குறுகிய கால அளவீட்டில் இன்னமும் பலவீனம் இருப்பதையே காட்டுகிறது. மொமென்டம் இண்டிகேட்டர்களும் இறக்கத்திற்கான அழுத்தம் தொடர்வதையே காட்டுகின்றன.

நிப்டிக்கு 23,180 - 23,150 போன்ற லெவல்களில் உடனடி சப்போர்ட்டும், 23,385ல் உடனடி ரெசிஸ்டென்ஸும் இருக்கிறது. 23,385க்கு கீழே இருக்கும் வரை ஏற்றம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவே. 23,180 என்ற நிலையை உடைத்து கீழே சென்றால் 23,050 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. 23,385க்கு மேலே சென்றால் 23,530 வரை செல்வதற்கான வாய்ப்பு உள்ளது.

Image 1586541


நிப்டியின் தற்போதைய டெக்னிக்கல் சூழல் பலவீனமாக இருக்கிற போதிலும், முக்கிய பொருளாதார மற்றும் உலகளாவிய செய்திகளே அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கக்கூடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us