தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிஸ்: செய்திகளே நிப்டியின் திசையை நிர்ணயிக்கும்

டெக்னிக்கல் அனாலிசிஸ்: செய்திகளே நிப்டியின் திசையை நிர்ணயிக்கும்

டெக்னிக்கல் அனாலிசிஸ்: செய்திகளே நிப்டியின் திசையை நிர்ணயிக்கும்


UPDATED : ஜன 20, 2026 02:15 AM

ADDED : ஜன 20, 2026 02:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 20, 2026 02:15 AM ADDED : ஜன 20, 2026 02:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆரம்பத்தில் இருந்தே இறக்கத்தில் நடைபெற்ற நிப்டி, இரண்டு மணிக்குமேல் இறக்கத்திலிருந்து சிறிது மீண்டு, நாளின் இறுதியில், 108 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ம் இறக்கத்துடன் நிறைவடைந்தன.

இவற்றில் 'நிப்டி மிட்கேப் 50' குறியீடு குறைந்தபட்சமாக 0.25 சதவிகித இறக்கத்துடனும்; 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 1.34 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தது. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 3 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 16 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தது. நிப்டி எப்.எம்.சி.ஜி., குறியீடு அதிகபட்சமாக 0.67 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி ரியால்ட்டி' குறியீடு அதிகபட்சமாக 1.99 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

Image 1523978வர்த்தகம் நடந்த 3,293 பங்குகளில், 871 ஏற்றத்துடனும், 2,315 இறக்கத்துடனும், 107 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. தற்போதைய டெக்னிக்கல் சூழலில், நிப்டி சற்று இறங்குவதற்கு வாய்ப்பு இருப்பதைப் போன்ற நிலைமையே தென்படுகிறது. 200- நாள் சராசரிக்கு அருகில் நிப்டி இருக்கிறது.

Image 1523979டெக்னிக்கலாக இறக்கமோ அல்லது திசைதெரியா நிலையோ வரக்கூடும். இறக்கம் தொடர்ந்தால் 25,160-க்கு கீழே செல்லாத வரை, பெரிய அளவிலான இறக்கம் வருவதற்கு வாய்ப்பில்லை என கொள்ளலாம். இதற்கு செய்திகள் சாதகமாக இருக்கவேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us