தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ டெக்னிக்கல் அனாலிசிஸ்: செய்திகளே நிப்டியின் நகர்வை தீர்மானிக்கும்

 டெக்னிக்கல் அனாலிசிஸ்: செய்திகளே நிப்டியின் நகர்வை தீர்மானிக்கும்

 டெக்னிக்கல் அனாலிசிஸ்: செய்திகளே நிப்டியின் நகர்வை தீர்மானிக்கும்


UPDATED : மார் 05, 2026 02:31 AM

ADDED : மார் 05, 2026 02:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 05, 2026 02:31 AM ADDED : மார் 05, 2026 02:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆரம்பத்திலேயே கணிசமான இறக்கத்துடன் ஆரம்பித்த நிப்டி, சிறிது சிறிதாக இறக்கத்தில் இருந்து ஓரளவுக்கு மீண்டு, நாளின் இறுதியில் 385 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி 100' குறியீடு குறைந்தபட்சமாக 1.74 சதவீத இறக்கத்துடனும்; 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 2.65 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 18 குறியீடுகள் இறக்கத்துடனும்; 1 குறியீடு ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மிட்ஸ்மால் ஐடி & டெலிகாம்' குறியீடு குறைந்தபட்சமாக 0.97 சதவீத இறக்கத்துடனும்; 'நிப்டி மெட்டல்' குறியீடு அதிகபட்சமாக 3.99 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 'நிப்டி ஐ.டி.,' குறியீடு மட்டும் 0.11 சதவீத ஏற்றத்துடன் நிறைவடைந்தன.

Image 1544324

வர்த்தகம் நடந்த 3,337 பங்குகளில், 673 ஏற்றத்துடனும்; 2,577 இறக்கத்துடனும்; 87 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி, கடந்த ஏழு வர்த்தக தினங்களில் 1,090 புள்ளிகள் இறக்கத்தை சந்தித்துள்ளது. மிகவும் வேகமாக குறுகிய கால சராசரிகள் அனைத்துக்கும் கீழே சென்றுவிட்ட நிலையில், இறக்கத்திற்கான மொமென்டம் இன்னும் குறையவில்லை. தற்போதைய டெக்னிக்கல் நிலைமைப்படி, மொமென்டம் இண்டிகேட்டர்கள் ஓரளவுக்கு இறக்கம் தொடர்வதற்கு வாய்ப்பு இருக்கிற சூழலையே காட்டுகின்றன. செய்திகள் சாதகமாக இருந்தால் மட்டும் 24,250 மற்றும் 24,000-ல் ஒரளவு சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது.

Image 1544325

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us