தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ டெக்னிக்கல் அனாலிசிஸ்: செய்திகளே நிப்டியின் நகர்வை தீர்மானிக்கும்

 டெக்னிக்கல் அனாலிசிஸ்: செய்திகளே நிப்டியின் நகர்வை தீர்மானிக்கும்

 டெக்னிக்கல் அனாலிசிஸ்: செய்திகளே நிப்டியின் நகர்வை தீர்மானிக்கும்


UPDATED : மார் 20, 2026 02:38 AM

ADDED : மார் 20, 2026 02:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 20, 2026 02:38 AM ADDED : மார் 20, 2026 02:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சரிவுடன் ஆரம்பித்த நிப்டி, தொடர்ந்து இறங்கி, நாளின் இறுதியில் 775 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது.

16 பரந்த சந்தை குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ஸ்மால்கேப் 250' குறியீடு குறைந்தபட்சமாக 2.64 சதவிகித இறக்கத்துடனும்; 'நிப்டி மிட்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 3.29 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்த நாளில், 'நிப்டி ஆயில் & கேஸ்' குறியீடு, குறைந்தபட்சமாக 1.98 சதவிகித இறக்கத்துடனும், 'நிப்டி ஆட்டோ' குறியீடு அதிகபட்சமாக 4.25 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன.Image 1551290வர்த்தகம் நடந்த 3,306 பங்குகளில், 532 ஏற்றத்துடனும்; 2,677 இறக்கத்துடனும்; 97 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. எல்லா குறுகிய கால சராசரிகளுக்கும் கீழே வர்த்தகமாகிக்கொண்டிருக்கும் நிப்டியில், நெகட்டிவ் மொமெண்டம் தொடர்கிறது. ஆர்.எஸ்.ஐ., போன்ற இண்டிகேட்டர்கள் 'ஓவர்சோல்டு' என்ற நிலையில் இருக்கின்ற போதிலும், செய்திகள் சாதகமாக இல்லாத காரணத்தினால், இறக்கம் தொடர்கிறது. இது போன்ற நிலைமையில், டெக்னிக்கல் அனாலிசிஸ் பொய்யாகிப்போகும் வாய்ப்புகள் அதிகம். தற்போதைக்கு 23,000-த்தை தாண்டி கீழே இறங்கினால் 22,700 மற்றும் 22,500 வரையிலுமே சென்று திரும்ப வாய்ப்புள்ளது. ஏற்றம் வந்தாலுமே 23,800 எனும் ரெசிஸ்டென்ஸை தாண்டாதவரை அது தொடரும் என்று எதிர்பார்க்க முடியாத டெக்னிக்கல் சூழல் நிலவுகிறது.Image 1551291

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us