sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிப்டி, டெக்னிக்கலாக பலவீனமாக இருப்பதாகவே தெரிகிறது

டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிப்டி, டெக்னிக்கலாக பலவீனமாக இருப்பதாகவே தெரிகிறது

டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிப்டி, டெக்னிக்கலாக பலவீனமாக இருப்பதாகவே தெரிகிறது


UPDATED : மே 20, 2026 03:50 AM

ADDED : மே 20, 2026 02:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 20, 2026 03:50 AM ADDED : மே 20, 2026 02:56 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நேற்றைய வர்த்தகத்தில் கணிசமான உயர்வுடன் தொடங்கிய நிப்டி, பிற்பகல் 2.30 மணியளவில் சட்டென இறங்க ஆரம்பித்து, நாளின் இறுதியில் 31 புள்ளிகள் குறைந்து நிறைவடைந்தது. 18 பரந்த சந்தை குறியீடுகளில் 17 குறியீடுகள் உயர்வுடனும், 1 குறியீடு சரிவுடனும், முடிந்தன.

இவற்றில், 'நிப்டி 200' குறியீடு குறைந்தபட்சமாக 0.17 சதவீதமும், 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 1.22 சதவீதமும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. 'நிப்டி100' குறியீடு மட்டும் 0.01 சதவீத இறக்கத்துடன் நிறைவடைந்தது. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 16 குறியீடுகள் உயர்ந்தும், 5 குறியீடுகள் குறைந்தும் காணப்பட்டன.

இவற்றில், நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 3.23 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி பிரைவேட் பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 0.74 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,355 நிறுவனங்களின் பங்குகளில் 2,150 அதிகரித்தும், 1,109 குறைந்தும், 96 மாற்றம் ஏதும் இல்லாமலும் காணப்பட்டன.

நிப்டி 14, 21, 50, 200 நாள் சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) கீழேயே உள்ளது. இது, நிப்டி டெக்னிக்கலாக பலவீனமாக இருப்பதையே காட்டுகிறது. எம்.ஏ.சி.டி., மற்றும் ஆர்.ஓ.சி., .உள்ளிட்ட மொமொண்டம் இண்டிக்கேட்டர்களை கணக்கிட்டாலும் கீழ்நோக்கிய அழுத்தம் இருப்பதே தெரிகிறது.

Image 1578391


'பிபோனாச்சி ரிட்ரேஸ்மென்ட்' லெவல்களை கடக்க முடியாமல் நிப்டி தடைப்பட்ட நிலையில் உள்ளது. இது, சமீபத்திய ஏற்றமானது இறங்கிய வேகத்தில் காணும் மீட்சிதானே தவிர, நிப்டி செல்லும் திசையின் மாற்றம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை ஓரளவு ஊர்ஜிதம் செய்கிறது.

எனவே, தற்போதைய சூழலில் நிப்டி 'சைடுவேய்ஸ் டு பியரிஷ்' என்ற நிலைமையிலேயே வர்த்தகமாக டெக்னிக்கலாக வாய்ப்பு அதிகம். 23,800-24,000 லெவல்களில் ரெசிஸ்டென்ஸும், 23,500-23,250-ல் சப்போர்ட்டும் கிடைக்க வாய்ப்புள்ளது. 24,100-க்கு மேலே போனால் மட்டுமே மேல்நோக்கிய நகர்வுக்கான அமைப்பு உருவாகலாம்.

அதேபோல, 23,500-க்கு கீழே சென்றால் 22,300 வரை செல்லக்கூடும். அடுத்த கட்ட நகர்வுகள் செய்திகளின் அடிப்படையிலேயே இருக்கும் எனலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us