டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிப்டிக்கு 23,800ல் சப்போர்ட் கிடைக்க வாய்ப்பு
டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிப்டிக்கு 23,800ல் சப்போர்ட் கிடைக்க வாய்ப்பு
UPDATED : ஜூலை 09, 2026 02:36 AM
ADDED : ஜூலை 09, 2026 02:24 AM

நிப்டி
நேற்று 139 புள்ளிகள் சரிவுடன் தொடங்கிய நிப்டி, நாளின் இறுதியில் 516 புள்ளிகள் இறக்கத்துடன் முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18ம் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மிட்கேப் 50' குறியீடு குறைந்தபட்சமாக 1.45 சதவீதமும், 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 2.36 சதவீதமும் இறக்கத்துடனும் முடிவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளும் வீழ்ச்சியுடன் காணப்பட்டன.
இவற்றில், 'நிப்டி மெட்டல்' குறியீடு குறைந்தபட்சமாக 0.91 சதவீதமும், 'நிப்டி பி.எஸ்.யு., பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 2.72 சதவீதமும் சரிந்து முடிந்தன. வர்த்தகம் நடந்த 3,411 நிறுவனங்களின் பங்குகளில் 698 ஏற்றத்துடனும்; 2,631 இறக்கத்துடனும்; 82 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.
![]() |
நிப்டி 24,300க்கு மேல் நிலைத்திருக்க முடியாமல் வேகமான இறக்கம்தனை சந்தித்து 21 நாள் மற்றும் 50 நாள் இ.எம்.ஏ.,க்களுக்கு கீழே நிறைவடைந்துள்ளது. ஆர்.எஸ்.ஐ., மற்றும் ஸ்டோக்காஸ்டிக் போன்ற மொமென்டம் இண்டிகேட்டர்கள் பலவீனத்தை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளன.
உடனடி சப்போர்ட் என்பது 23,800 என்ற லெவலில் கிடைக்க வாய்ப்புள்ளது. 23,800ஐ தாண்டி இறங்கும் பட்சத்தில் 23,640 - 23,400 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. ஏற்றம் வந்தால் 23,920 - 23,980ல் உடனடி ரெசிஸ்டென்ஸ் இருக்கின்றது.
இதனை தாண்டினால் 24,170 வரை செல்ல வாய்ப்புள்ளது. 23,980 என்ற லெவலை கடந்து மேலே செல்லாதவரை குறுகிய கால அளவில் இறக்கத்திற்கான அழுத்தம் தொடரும் வாய்ப்பு உள்ளது.

