டெக்னிக்கல் அனாலிசிஸ் நிப்டி 24,195 வரை செல்ல வாய்ப்புள்ளது
டெக்னிக்கல் அனாலிசிஸ் நிப்டி 24,195 வரை செல்ல வாய்ப்புள்ளது
UPDATED : ஜூலை 02, 2026 03:59 AM
ADDED : ஜூலை 02, 2026 03:45 AM

நேற்று 31 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி, தொடர்ந்து ஏற்றம் கண்டு நாளின் இறுதியில் 140 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18ம் ஏற்றத்துடன் முடிந்தன.
இவற்றில், 'நிப்டி மிட்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 0.69 சதவீதமும், 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு குறைந்தபட்சமாக 0.16 சதவீதமும் உயர்ந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 13 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 8 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
![]() |
இவற்றில், 'நிப்டி ரியால்ட்டி' குறியீடு அதிகபட்சமாக 3.58 சதவீதம் அதிகரித்தும், நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 2.01 சதவீதம் குறைந்தும் காணப்பட்டன. வர்த்தகம் நடந்த 3,425 நிறுவனங்களின் பங்குகளில் 1,848 ஏற்றத்துடனும்; 1,472 இறக்கத்துடனும்; 105 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.
குறுகிய கால மற்றும் நடுத்தர கால சராசரிகளுக்கு (14, 21 மற்றும் 50 நாள் இ.எம்.ஏ.,க்கள்) மேலே நிப்டி நிறைவடைந்தது. எம்.ஏ.சி.டி., சிக்னல் லைனுக்கு மேலே இருப்பது நடுத்தர கால ஏற்ற போக்கு தொடர்வதற்கு ஆதரவாக உள்ளது.
அதேநேரம், மொமென்டம் இண்டிகேட்டர்கள் கன்சாலிடேஷன் நடப்பதற்கான சூழலை காட்டுகின்றன. ஸ்டொக்காஸ்டிக் ஆசிலேட்டர் குறுகிய கால வேகம் சற்று குறைந்திருப்பதையும், அதனால் கன்சாலிடேஷன் தொடரக்கூடும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
எனவே, தற்போதைய டெக்னிக்கல் சூழலில் 24,050க்கு மேலே சென்றால் நிப்டி 24,180 - 24,195 வரை செல்ல வாய்ப்புள்ளது. உடனடி சப்போர்ட்டான 23,900க்கு கீழே சென்றால் 23,780 வரையிலும் செல்லக்கூடும். நிப்டி 23,850 - 23,900க்கு மேலே இருக்கும் வரை குறுகிய கால ஏற்றப்போக்கு தொடர்வதற்கான வாய்ப்பே அதிகமாக உள்ளது.

