தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிப்டி 24,450 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது

டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிப்டி 24,450 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது

டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிப்டி 24,450 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது


UPDATED : ஜூலை 03, 2026 05:41 AM

ADDED : ஜூலை 03, 2026 02:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 03, 2026 05:41 AM ADDED : ஜூலை 03, 2026 02:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நேற்று 56 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி தொடர்ந்து ஏற்றம் கண்டு நாளின் இறுதியில் 169 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18ம் ஏற்றத்துடன் முடிந்தன.

இவற்றில், 'நிப்டி ஸ்மால்கேப்100' குறியீடு அதிகபட்சமாக 1.25 சதவீதமும், 'நிப்டி மிட்கேப்100' குறியீடு குறைந்தபட்சமாக 0.48 சதவீதமும் ஏற்றத்துடன் முடிந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 19 குறியீடுகள் உயர்வுடனும்; 2 குறியீடுகள் சரிவுடனும் காணப்பட்டன

இவற்றில் நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 4.64 சதவீதம் உயர்ந்தும், 'நிப்டி பி.எஸ்.யு., பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 0.43 சதவீதம் சரிந்தும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,452 நிறுவனங்களின் பங்குகளில் 2,225 ஏற்றத்துடனும்; 1,145 இறக்கத்துடனும்; 82 மாற்றம் ஏதும் இல்லாமலும் முடிவடைந்திருந்தன.

வலுவான ரெசிஸ்டென்ஸ் உள்ள லெவலில் குறைவான புல்லிஷ்னெஸுடன் நிப்டி நிறைவடைந்துள்ளது. குறுகிய கால சராசரிகள் (இ.எம்.ஏ.,) மற்றும் இச்சிமோகு க்ளெடுக்கு மேலே நிறைவடைந்திருப்பது ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை காட்டுகிறது.

Image 1594554


தற்போதைய நிலைமையில் நிப்டி வலுவான ரெசிஸ்டென்ஸான 24,422ஐ (200 நாள் இ.எம்.ஏ.,) நோக்கி சென்று கொண்டுள்ளது. மொமென்டம் இண்டிகேட்டர்கள் ஏற்றத்திற்கு ஆதரவாக இருக்கிற போதிலும் வலுவான ரெசிஸ்டென்ஸ் நிலையை உறுதியாக உடைக்கும் வலிமை (ப்ரேக் அவுட்) தற்போதைக்கு காணப்படவில்லை.

எனவே, ரெசிஸ்டென்ஸிற்கு அருகே கன்சாலிடேஷன் நடக்க வாய்ப்புள்ளது. தற்போதைய சூழலில் 24,225க்கு மேலே சென்றால் 24,450 வரையிலும், 24,175க்கு கீழே சென்றால் 23,900 வரையிலும் சென்று திரும்ப வாய்ப்புள்ளது. செய்திகளை பொறுத்தே இது நடைபெற வாய்ப்புள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us