sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/டெக்னிக்கல் அனாலிசிஸ் :  சப்போர்ட் லெவலுக்கு அருகே போராடும் நிப்டி

டெக்னிக்கல் அனாலிசிஸ் :  சப்போர்ட் லெவலுக்கு அருகே போராடும் நிப்டி

டெக்னிக்கல் அனாலிசிஸ் :  சப்போர்ட் லெவலுக்கு அருகே போராடும் நிப்டி

1


UPDATED : ஜூன் 12, 2026 02:32 AM

ADDED : ஜூன் 12, 2026 02:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 12, 2026 02:32 AM ADDED : ஜூன் 12, 2026 02:18 AM

1


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நேற்றைய வர்த்தகத்தில் 110 புள்ளிகள் இறங்கி துவங்கிய நிப்டி, மதியவேளையில் 107 புள்ளிகள் வரை உயர்ந்தது. இருப்பினும், நாளின் இறுதியில் 53 புள்ளிகள் குறைந்து முடிந்தது. 18 பரந்த சந்தை குறியீடுகளும் இறக்கத்துடன் முடிவடைந்தன.

இவற்றில, 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு குறைந்தபட்சமாக 0.37 சதவீதமும்; 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 1.12 சதவீதமும் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில், 6 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 15 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி மீடியா' குறியீடு அதிகபட்சமாக 1.78 சதவீத ஏற்றத்துடனும்; நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 1.62 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,362 நிறுவனங்களின் பங்குகளில், 1,013 ஏற்றத்துடனும்; 2,255 இறக்கத்துடனும்; 94 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.

Image 1586896


என்ன முயன்றாலும் நிப்டியால் ஏற்றத்தை தொடர முடியவில்லை. முக்கிய குறுகியகால சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) கீழே நிறைவடைந்திருப்பதால், குறுகியகாலத்தில் நிப்டி பலவீனமாகவே இருக்கிறது என்பது தெளிவாக தென்படுகின்றது. மொமெண்டம் இண்டிகேட்டர்களான எம்.ஏ.சி.டி., ஆர்.எஸ்.ஐ., மற்றும் ஆர்.ஓ.சி., போன்றவையும் பியரிஷாக இருப்பதையே காட்டுகின்றன.

தற்போதைய சூழ்நிலையில் 23,000த்தில் சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. அதைத்தாண்டி இறங்கினால் 22,800 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. 23,345ஐ கடந்தால் மட்டுமே 23,500 நோக்கி மீட்சி வரக்கூடும்.

இவை அனைத்தையும் வைத்துப்பார்த்தால், பலவீனமான நிலையில் சப்போர்ட் அருகே நிப்டி போராடுகிறது என்பது தெரிகிறது. தற்போதைய சூழலில் குறுகிய வரம்பிற்குள் திசையற்ற நகர்வு தொடரும் வாய்ப்பு அதிகரித்துள்ள போதிலும், 23,345ஐ கடந்து செல்லாத வரை பலவீனமான நிலைமை தொடரக்கூடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us