டெக்னிக்கல் அனாலிசிஸ் : 23,500க்கு மேலே இருக்கும் வரை நிப்டி இறங்க வாய்ப்பு குறைவு
டெக்னிக்கல் அனாலிசிஸ் : 23,500க்கு மேலே இருக்கும் வரை நிப்டி இறங்க வாய்ப்பு குறைவு
UPDATED : ஜூன் 13, 2026 01:47 AM
ADDED : ஜூன் 13, 2026 01:34 AM

நிப்டி நேற்று ஏற்றத்துடனே துவங்கிய நிலையில், நாளின் இறுதியில் 461 புள்ளிகள் அதிகரித்தே முடிந்தது. 18 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
இவற்றில், 'நிப்டி இந்தியா எப்.பி.ஐ., 150' குறியீடு குறைந்தபட்சமாக 1.95 சதவீதமும், 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 3.02 சதவீதமும் உயர்வுடன் முடிந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 20 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 1 குறியீடு மட்டும் இறக்கத்துடனும் காணப்பட்டன.
இவற்றில், 'நிப்டி பார்மா' குறியீடு குறைந்தபட்சமாக 0.30 சதவீத உயர்வுடனும், 'நிப்டி பைனான்சியல் சர்வீசஸ் எக்ஸ் - பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 3.83 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 'நிப்டி ஐ.டி.,' குறியீடு மட்டும் 0.09 சதவீத இறக்கத்துடன் முடிந்தது.
வர்த்தகம் நடந்த 3,390 நிறுவனங்களின் பங்குகளில் 2,739 ஏற்றத்துடனும்; 564 இறக்கத்துடனும்; 87 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி ஒரே பாய்ச்சலாக ஏற்றம் கண்டு 10 மற்றும் 20 நாட்கள் சராசரிகளுக்கு மேலே (இ.எம்.ஏ.,) சென்று நிறைவடைந்துள்ளது.
![]() |
இது, குறுகியகால மொமென்டம் ஏற்றத்துக்கு சாதகமாக மாறுவதை குறிக்கிறது. ஆர்.எஸ்.ஐ., (51.25) பலவீனமான நிலைமையில் இருந்து நிப்டி மீண்டு வருவதையும் ஸ்டொக்காஸ்ட்டிக் ஆசிலேட்டர் ஏற்றத்திற்கான மொமென்டம் வலுப்பெறுவதையும் காட்டுகிறது.
தற்போதைய சூழலில், நிப்டிக்கு 23,720 - 23,750 அடுத்த ரெசிஸ்டென்ஸாக உள்ளது. இதை தாண்டி செல்லும் பட்சத்தில் 24,000 - -24,050 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.
ஒரு வேளை இறக்கம் வந்தால் 23,500 -- 23,400 லெவல்களில்தான் சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. 23,500க்கு மேலே இருக்கும் வரை பெரிய இறக்கத்திற்கான வாய்ப்பு இல்லை என கொள்ளலாம்.

