தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டி 24,400ஐ கடக்காத வரை குறுகிய எல்லைக்குள்ளேயே பயணிக்கும்

டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டி 24,400ஐ கடக்காத வரை குறுகிய எல்லைக்குள்ளேயே பயணிக்கும்

டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டி 24,400ஐ கடக்காத வரை குறுகிய எல்லைக்குள்ளேயே பயணிக்கும்


ADDED : ஜூலை 31, 2026 02:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2026 02:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

30-07-2026

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.)

நிப்டி50 (எண்ணிக்கை)

விப்ரோ 186.41 2.80

ஹெச்.டி.எப்.சி., பேங்க் 753.40 5.20

எட்டர்னல் 310.05 -1.75

கோல் இந்தியா 417.40 7.35

இன்போசிஸ் 1,155.00 -0.60

நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)

சுஸ்லான் எனர்ஜி 47.41 -0.04

எஸ் பேங்க் 22.54 -0.30

ஸ்விக்கி 293.80 6.46

ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 84.70 -0.32

அசோக் லேலண்டு 158.80 0.84

நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை)

ரெடிங்டன் 310.00 22.55

பிரமல் பார்மா 196.74 1.06

ஐநாக்ஸ் விண்ட் 75.07 -1.53

ஏஞ்சல் ஒன் 291.80 -10.70

சின்ஜீன் இண்டர்நேஷனல் 400.00 -14.25

மற்ற சில பங்குகளின் விலை விவரம்

பி.எஸ்.இ., 3,532.80 -8.60

சென்னை பெட்ரோலியம் கார்ப்போரேஷன் 1,244.00 31.70

கர்நாடகா பேங்க் 292.00 13.00

எல்.டி., புட்ஸ் 397.30 18.70

ஷிப்பிங் கார்ப்போரேஷன் ஆப் இந்தியா 278.50 -0.10

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு

நிப்டி 24,249.55 24,342.95 24,187.10 24,317.15

நேற்று பெரிய மாற்றம் ஏதுமின்றி தொடங்கிய நிப்டி, சிறு சிறு ஏற்ற இறக்கங்களை சந்தித்து பின்னர் நாளின் இறுதியில் 66 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18ல் 3 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 14 குறியீடுகள் இறக்கத்துடனும்; 1 குறியீடு மாற்றம் ஏதுமின்றியும் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி100' குறியீடு அதிக பட்சமாக 0.24 சதவீத உயர்வுடனும், 'நிப்டி ஸ்மால்கேப்250' குறியீடு அதிக பட்சமாக 0.74 சதவீத சரிவுடனும் முடிந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 8 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 13 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி ஆட்டோ' குறியீடு அதிக பட்சமாக 1.63 சதவீதம் அதிகரித்தும், 'நிப்டி ரியால்ட்டி' குறியீடு அதிக பட்சமாக 2.06 சதவீதம் குறைந்தும் முடிவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,419 நிறுவனங்களின் பங்குகளில் 1,326 ஏற்றத்துடனும்; 1,973 இறக்கத்துடனும்; 120 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.

டெக்னிக்கலாக சிறிய ஏற்றத்துக்கான சார்புடன் நிப்டி குறுகிய எல்லைக்குள் நகர்கிறது. தவிர, குறுகியகால சராசரிகளுக்கு மேலேயும் நிறைவடைந்திருப்பது குறிப்பிடத்தக்கதொரு விஷயமாகும்.

எம்.ஏ.சி.டி., ஆர்.எஸ்.ஐ., மற்றும் ஆர்.ஓ.சி., மொமென்டம் அதிகரித்து வருவதையே காட்டுகின்றன. ஸ்டோக்காஸ்ட்டிக் ஆசிலேட்டர் ஓவர் பாட் நிலைமையை அடைந்துள்ளது. 24,370க்கு அருகே வலுவான ரெசிஸ்டென்ஸ் உள்ளது.

நிப்டி 24,400க்கு மேலே வலுவுடன் சென்றால் 24,500 வரை செல்ல வாய்ப்புள்ளது. இறக்கம் வந்தால் 24,120-24,150 லெவல்களில் வலுவான சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. 24,400க்கு மேலே சென்றால் மட்டுமே டெக்னிக்கல் சூழல் வலுவான ஏற்றத்திற்கு சாதகமாக மாற வாய்ப்புள்ளது. அது நடக்காத வரை குறுகிய எல்லைகளுக்குள் நகர்வதற்கான டெக்னிக்கல் சூழலே தற்போது நிலவுகிறது.

ஆதரவு 24,220 24,125 24,065

தடுப்பு 24,375 24,435 24,495

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us