தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிப்டியின் ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது

டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிப்டியின் ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது

டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிப்டியின் ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது


UPDATED : ஜூன் 19, 2026 01:08 AM

ADDED : ஜூன் 19, 2026 12:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 19, 2026 01:08 AM ADDED : ஜூன் 19, 2026 12:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நேற்று 11 புள்ளிகள் இறக்கத்துடன் ஆரம்பித்த நிப்டி நாள் முழுவதுமே ஏற்ற இறக்கங்கள் பலவற்றை சந்தித்தது. பின்னர், மூன்று மணிக்கு மேல் சீரான உயர்வு கண்டு நாளின் இறுதியில் 82 புள்ளிகள் அதிகரித்து முடிந்தது. 18 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி ஸ்மால்கேப் 250' குறியீடு அதிகபட்சமாக 0.67 சதவீதமும், 'நிப்டி இந்தியா எப்.பி.ஐ.,150' குறியீடு குறைந்தபட்சமாக 0.32 சதவீதமும் ஏற்றத்துடன் காணப்பட்டன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 18 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 2 குறியீடுகள் இறக்கத்துடனும்; 1 குறியீடு மாற்றம் ஏதுமின்றியும் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி500 ஹெல்த்கேர்' குறியீடு அதிகபட்சமாக 1.02 சதவீத உயர்வுடனும், நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 1.19 சதவீத சரிவுடனும் முடிவடைந்தன. 'நிப்டி ஆயில் & கேஸ்' குறியீடு மட்டும் மாற்றம் ஏதுமின்றி நிறைவடைந்தது.

Image 1589470


வர்த்தகம் நடந்த 3,384 நிறுவனங்களின் பங்குகளில் 1,897 ஏற்றத்துடனும்; 1,382 இறக்கத்துடனும்; 105 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. குறுகியகாலத்தில் ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்பை நிப்டி அனைத்து குறுகிய கால சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) மேலே நிறைவடைந்திருப்பது காட்டுகிறது.

ஆர்.எஸ்.ஐ., 60க்கு சற்று மேலே இருப்பது ஏற்றத்திற்கான வாய்ப்பு இன்னமும் இருப்பதையே உணர்த்துகிறது. அருகில் இருக்கும் உடனடி ரெசிஸ்டென்ஸான 24,260ஐ தாண்டிவிட்டால் 200நாள் இ.எம்.ஏ., ஆன 24,600தான் அடுத்து நிப்டி எதிர்கொள்ளக்கூடிய வலுவானதொரு ரெசிஸ்டென்ஸாக இருக்கும்.

இறக்கம் வந்தால் 23,800-23,600 போன்ற லெவல்களில் கணிசமான சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. பெரிய பாதிப்பை உருவாக்கும் அளவிலான செய்திகள் இல்லாத பட்சத்தில் ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்பே டெக்னிக்கலாக தென்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us