தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/டெக்னிக்கல் அனாலிசிஸ் : லாபத்தை வெளியே எடுக்கும் வாய்ப்பு வரலாம்

டெக்னிக்கல் அனாலிசிஸ் : லாபத்தை வெளியே எடுக்கும் வாய்ப்பு வரலாம்

டெக்னிக்கல் அனாலிசிஸ் : லாபத்தை வெளியே எடுக்கும் வாய்ப்பு வரலாம்


UPDATED : ஜூன் 18, 2026 02:30 AM

ADDED : ஜூன் 18, 2026 02:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 18, 2026 02:30 AM ADDED : ஜூன் 18, 2026 02:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிப்டி நேற்று 55 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்தது. வர்த்தகத்தின் இடையே அதிக ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட நிலையில், நாளின் இறுதியில் 96 புள்ளிகள் உயர்ந்து முடிந்தது. 18 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி மிட்கேப்50' குறியீடு குறைந்தபட்சமாக 0.30 சதவீதமும், 'நிப்டி மைக்ரோகேப்250' குறியீடு அதிகபட்சமாக 1.09 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 10 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 10 குறியீடுகள் இறக்கத்துடனும்; 1 குறியீடு மாற்றம் ஏதுமின்றியும் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி கன்ஸ்யூமர் டியுரபிள்' குறியீடு அதிகபட்சமாக 2.11 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி ஆட்டோ' குறியீடு அதிகபட்சமாக 0.62 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 'நிப்டி பைனான்சியல் சர்வீசஸ் எக்ஸ் - பேங்க்' குறியீடு மாற்றம் ஏதுமின்றி நிறைவடைந்தது.

வர்த்தகம் நடந்த 3,430 நிறுவனங்களின் பங்குகளில் 1,921 ஏற்றத்துடனும்; 1,396 இறக்கத்துடனும்; 113 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டியின் ஏற்றம் குறுகிய கால சராசரிகள் மற்றும் முக்கிய லெவலான 24,000 போன்றவற்றை தாண்டி தொடர்கிறது.

Image 1589143


மொமெண்டம் இண்டிக்கேட்டர்கள் நிப்டி ஏற்றம் பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதையே காட்டுகின்றன என்ற போதிலும் ஸ்டொக்காஸ்டிக் இண்டிக்கேட்டர் சற்று ஓவர் பாட் (அதிகப்படியான ஏற்றத்தை காட்டும் நிலை) என்ற நிலமையை அடைந்துள்ளது மட்டுமே கவனிக்க வேண்டியதாக உள்ளது. இது, லாபத்தை வெளியே எடுக்கும் அளவிலான விற்பனை எந்த நேரத்திலும் வரக்கூடியதற்கான வாய்ப்பிருப்பதையே காட்டுகிறது.

நிப்டி 24,000த்திற்கும் மேலே இருக்கும் வரை 24,250 - 24,465 என்ற லெவல்களை நோக்கி செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. இறக்கம் வந்தால் 23,925 மற்றும் 23,800 என்ற லெவலில் உள்ள சப்போர்ட்கள் வரையிலும் சென்று திரும்பக்கூடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us