டெக்னிக்கல் அனாலிசிஸ் : ஏற்றம் வந்தால் 24,900 வரை செல்ல வாய்ப்பு
டெக்னிக்கல் அனாலிசிஸ் : ஏற்றம் வந்தால் 24,900 வரை செல்ல வாய்ப்பு
UPDATED : ஆக 06, 2026 03:38 AM
ADDED : ஆக 06, 2026 03:26 AM

நேற்று 54 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கிய நிப்டி, தொடர்ந்து சிறுசிறு ஏற்ற இறக்கங்களை கண்டு, பின் இறங்க ஆரம்பித்து, -115 என்ற அளவிற்கு இறங்கி, நாளின் இறுதியில் 9 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 18 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
இவற்றில் 'நிப்டிமிட்கேப் 50' குறியீடு குறைந்தபட்சமாக 0.01 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி மைக்ரோகேப்250' குறியீடு அதிகபட்சமாக 1.29 சதவிகித ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 9 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 12 குறியீடு இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
இவற்றில் 'நிப்டி மெட்டல்' குறியீடு அதிகபட்சமாக 1.72 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி மீடியா' குறியீடு அதிகபட்சமாக 1.58 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
வர்த்தகம் நடந்த 3,472 நிறுவனங்களின் பங்குகளில் 1,972 ஏற்றத்துடனும்; 1,394 இறக்கத்துடனும்; 106 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. டெக்னிக்கல் செட்-அப்பில் பெரிய மாற்றம் ஏதும் இல்லாமல், நிப்டி நிறைவடைந்துள்ளது.
நிப்டி முக்கிய சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) மேலே நிறவடைந்திருப்பது இன்னும் ஏற்றத்திற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை காட்டுகிறது எனலாம். உடனடி ரெசிஸ்டென்ஸ் 24,770-ல் இருக்கிறது. பல்வேறு இண்டிகேட்டர்களும் ஏற்றம் வருவதற்கு சாதகமாக இருக்கின்ற போதிலும் 'ஸ்டோக்காஸ்ட்டிக் ஆசிலேட்டர்' ஓவர் பாட் நிலைமையை அடைந்துள்ளது.
![]() |

