டெக்னிக்கல் அனாலிசிஸ் : இறக்கத்திலிருந்து மீளும் வேகம் குறைவாக உள்ளது
டெக்னிக்கல் அனாலிசிஸ் : இறக்கத்திலிருந்து மீளும் வேகம் குறைவாக உள்ளது
UPDATED : ஏப் 30, 2026 02:06 AM
ADDED : ஏப் 30, 2026 02:02 AM

நிப்டி
ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி, நாளின் இறுதியில் 181 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் 13 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 3 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மிட்கேப்100' குறியீடு அதிகபட்சமாக 0.07 சதவீதம் குறைந்தும், 'நிப்டி ஸ்மால்கேப்100' குறியீடு அதிகபட்சமாக 0.65 சதவீதம் அதிகரித்தும் காணப்பட்டன. 19 துறை சார்ந்த குறியீடுகளில் 14 குறியீடுகள் உயர்வுடனும், 5 குறியீடுகள் சரிவுடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மீடியா' குறியீடு அதிக பட்சமாக 0.49 சதவீத இறக்கத்துடனும், 'நிப்டி எப்.எம்.சி.ஜி., குறியீடு' அதிகபட்சமாக 1.75 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.
![]() |
வர்த்தகம் நடந்த 3,394 நிறுவனங்களின் பங்குகளில் 1,625 உயர்வுடனும், 1,666 வீழ்ச்சியுடனும், 103 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. இன்னமும் நிப்டியால் 50 நாள் சராசரியை (இ.எம்.ஏ.,) தாண்டி நிறைவடைய முடியவில்லை. தவிர, 24,300-24,400 போன்ற லெவல்களில் வலுவானதொரு ரெசிஸ்டென்ஸ் வேறு இருக்கிறது. மொமெண்டம் இண்டிகேட்டர்களும் சமநிலை அல்லது ஓரளவு ஏற்றம் என்பதை காட்டும் வண்ணமே இருக்கின்றன. இது ரெக்கவரியின் வேகம் குறைவதையே உணர்த்துகிறது. தற்போதைய டெக்னிக்கல் சூழலில் நிப்டி 24,000 - 24,400 என்ற லெவல்களில் கன்சாலிடேட் ஆவதற்கான வாய்ப்பே தென்படுகின்றது. 'பிபோனாச்சி ரிட்ரேஸ்மென்ட்' நிலைகளுமே 24,400ல் ரெசிஸ்டென்ஸ் வலுவாக உள்ளதையே காட்டுகிறது. எனவே, 24,400ஐ தாண்டினால் மட்டுமே 24,750 வரை நிப்டி செல்ல வாய்ப்புள்ளது. 24,000த்துக்கு கீழே சென்றால் 23,600 வரை செல்லக்கூடும். மொத்தத்தில் சைடுவேஸ் அல்லது பியரிஷ் என்பதே டெக்னிக்கல் சூழலாக உள்ளது. செய்திகள் ஆதரவாக இருந்தால் மட்டுமே இந்த நிலை மாறும்.

