sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மே 01, 2026 ,சித்திரை 18, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

டெக்னிக்கல் அனாலிசி்ஸ்: குறுகிய இடைவெளிக்குள் வர்த்தகமாக வாய்ப்புள்ளது

/

டெக்னிக்கல் அனாலிசி்ஸ்: குறுகிய இடைவெளிக்குள் வர்த்தகமாக வாய்ப்புள்ளது

டெக்னிக்கல் அனாலிசி்ஸ்: குறுகிய இடைவெளிக்குள் வர்த்தகமாக வாய்ப்புள்ளது

டெக்னிக்கல் அனாலிசி்ஸ்: குறுகிய இடைவெளிக்குள் வர்த்தகமாக வாய்ப்புள்ளது


UPDATED : மே 01, 2026 03:04 AM

ADDED : மே 01, 2026 02:29 AM

Google News

UPDATED : மே 01, 2026 03:04 AM ADDED : மே 01, 2026 02:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நேற்று 180 புள்ளிகள் இறக்கத்துடன் ஆரம்பித்த நிப்டி, வர்த்தகத்தின் இடையே அதைவிட இரு மடங்குக்கு மேலாக சரிந்தது. பின்னர், அதிலிருந்து சற்று மீண்டு, நாளின் இறுதியில் 180 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் வீழ்ச்சியுடனே முடிவடைந்தன. இவற்றில், ' நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு குறைந்தபட்சமாக 0.36 சதவீத சரிவுடனும், 'நிப்டி மிட்கேப் 100' குறியீடு அதிகபட்சமாக 0.98 சதவீத வீழ்ச்சியுடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில் 3 குறியீடுகள் ஏற்றத்துடனும், 15 குறியீடுகள் இறக்கத்துடனும், ஒரு குறியீடு மாற்றம் ஏதுமின்றியும் நிறைவடைந்தன. இவற்றில், ' நிப்டி ஐ.டி., குறியீடு' அதிகபட்சமாக 0.37 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி மெட்டல் குறியீடு' அதிகபட்சமாக 2.12 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

Image 1571331


வர்த்தகம் நடந்த 3,368 நிறுவனங்களின் பங்குகளில், 1,293 ஏற்றத்துடனும், 1,974 இறக்கத்துடனும், 101 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி 21 நாள் சராசரிக்கு (இ.எம்.ஏ.,) அருகே நிறைவடைந்துள்ளது. சமீபத்தில் கண்ட ஏற்றத்திற்கு பின்னால் மொமென்டம் இண்டிகேட்டர்கள் நியுட்ரல் முதல் ஓரளவு பாசிட்டிவ் என்ற நிலைமைக்கு சென்று விட்டன. இது நிப்டி இந்த லெவலில் இளைப்பாறுவதையே காட்டுகிறது. இந்த டெக்னிக்கல் சூழலில், நிப்டி குறுகிய எல்லைக்குள் வர்த்தகமாகவோ (ரேஞ்ச் பவுண்டு) அல்லது இறக்கத்தை சந்திக்கவோ வாய்ப்புள்ளது. உடனடியான ரெசிஸ்டென்ஸ் 24,100 - 24,200 லெவல்களிலும் சப்போர்ட் 23,750 லெவலிலும் இருக்கிறது. செய்திகளே அடுத்த கட்ட நகர்வை முடிவு செய்யும்.






      Dinamalar
      Follow us