டெக்னிக்கல் அனாலிசிஸ்: சிறிதளவு ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது
டெக்னிக்கல் அனாலிசிஸ்: சிறிதளவு ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது
UPDATED : செப் 11, 2025 01:19 AM
ADDED : செப் 11, 2025 01:18 AM

நிப்டி
நே ற்றைய வர்த்தகத்தில், 24,991-ல் ஏற்றத்துடன் துவங்கிய நிப்டி, 25,035 என்ற உச்சத்தை தொட்டு, மதியத்துக்கு பிறகு இறங்கி (24915) கடைசியில், நாளின் இறுதியில் 104 புள்ளிகள் ஏற்றத்துடன் 24,973-ல் நிறைவடைந்தது. நிப்டியின் எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9):33.07 ஆகவும் ரேட் ஆப் சேஞ்ச் (12, CL):0.41 ஆகவும் இருப்பது, சிறிதளவு ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்புள்ளது என்பதையே காட்டுகிறது. 24,975 என்ற எல்லைக்கு மேலே சென்று, தொடர்ந்து வர்த்தகம் நடந்தால் மட்டுமே, ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது எனலாம்.
![]() |
தற்போதைய டெக்னிக்கல் அமைப்பின் படி, நிப்டி 24,914, 24,854 மற்றும் 24,808 என்ற நிலைகளை ஆதரவு நிலைகளாகக் கொண்டும், 25,034, 25,095 மற்றும் 25,141 என்ற எல்லைகளை தடுப்பு நிலைகளாகக் கொண்டும் செயல்பட வாய்ப்புள்ளது.
![]() |
![]() |
நிப்டி பேங்க்
நே ற்று 54,554- புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பத்த நிப்டி பேங்க் குறியீடு, தொடர்ந்து ஏற்றத்தை சந்தித்து, 54,705 என்ற உச்சத்தை தொட்டும்; 54,400 என்ற குறைந்த அளவை சந்தித்தும், பின்னர் 54,536 என்ற அளவில், 319 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9): 38.79 ஆகவும்; ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14,CL): 45.24 ஆகவும்; ரேட் ஆப் சேஞ்ச் (12,CL): -1.11 ஆகவும் இருக்கிறது.
இந்த நிலைமையில் ஏற்றம் உருவாக 54,547 என்ற அளவுக்கு மேலே சென்று தொடர்ந்து வர்த்தகம் நடைபெற்றால் மட்டும், சிறிதளவு ஏற்றத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. 54,389, 54,242,
மற்றும் 54,125 போன்ற நிலைகளை ஆதரவு நிலைகளாகக் கொண்டும்; 54,694, 54,852 மற்றும் 54,969 என்ற நிலைகளை தடுப்பு நிலைகளாகக் கொண்டும் நிப்டி பேங்க் செயல்பட வாய்ப்புள்ளது.



