டெக்னிக்கல் அனாலிசிஸ்: ஏற்றம் வருவதற்கு முன் சிறிய அளவிலான பின்னடைவு
டெக்னிக்கல் அனாலிசிஸ்: ஏற்றம் வருவதற்கு முன் சிறிய அளவிலான பின்னடைவு
UPDATED : ஜன 09, 2026 02:48 AM
ADDED : ஜன 09, 2026 02:27 AM

நிப்டி
ஆரம்பத்தில் இருந்தே இறங்க ஆரம்பித்த நிப்டி தொடர்ந்து தங்குதடையின்றி இறங்கி நாளின் இறுதியில் 263 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16ம் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் நிப்டி100 குறியீடு குறைந்தபட்சமாக 1.19 சதவீத இறக்கத்துடனும், நிப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு அதிகபட்சமாக 1.99 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
19 துறை சார்ந்த குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்த நாளில் நிப்டி பிரைவேட் பேங்க் குறியீடு குறைந்தபட்சமாக 0.37 சதவீத இறக்கத்துடனும், நிப்டி மெட்டல் குறியீடு அதிகபட்சமாக 3.40 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,247 பங்குகளில் 545 ஏற்றத்துடனும், 2,625 இறக்கத்துடனும், 77 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. மொமென்டம் இண்டிகேட்டர்கள் பலவீனமாய் தெரிய ஆரம்பித்துள்ளன. ஏற்றம் வருவதற்கு முன்னால் சிறிய அளவிலான பின்னடைவோ அல்லது கன்சாலிடேஷனோ நடந்தேயாக வேண்டும் என்ற டெக்னிக்கல் சூழல் உருவாகியுள்ளது. செய்திகளே அடுத்த நகர்வுகளை தீர்மானிக்கும்.






