டெக்னிக்கல் அனாலிசிஸ்: திசை தெரியாத நிலை நீடிக்கலாம்!
டெக்னிக்கல் அனாலிசிஸ்: திசை தெரியாத நிலை நீடிக்கலாம்!
UPDATED : அக் 04, 2025 10:03 AM
ADDED : அக் 03, 2025 11:54 PM

நிப்டி
ம தியம் 2.30 மணிவரை திசைதெரியாத நிலையிலேயே சென்ற நிப்டி, அதன் பிறகு ஏற்றத்தை சந்தித்து, நாளின் இறுதியில் 57 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ல் 0.23% (நிப்டி50) முதல் 1.32% (மைக்ரோகேப் 250) வரையிலான அனைத்து குறியீடுகள் ஏற்றத்துடனும், 17 துறை சார்ந்த குறியீடுகளில் 14 குறியீடுகள் 0.04% (மீடியா) முதல் 1.82 % (மெட்டல்) அளவிலான ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.
ஆட்டோ, ரியால்ட்டி மற்றும் ஹெல்த்கேர் குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,185 பங்குகளில் 2,140 ஏற்றத்துடனும், 960 இறக்கத்துடனும், 85 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டியின் எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9): -42.92, ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14,சி.எல்.,):49.29 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12, சி.எல்.,): -1.37 என இருக்கிறது. டெக்னிக்கலாக 24,850 என்ற நிலையானது, தற்சமயம் முக்கியமானதாக இருக்கிறது. இதற்கு கீழே போகாதவரை இறக்கம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. டெக்னிக்கலாக திசை தெரியா நிலை நீடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
![]() |
நிப்டி பேங்க்
ஆ ரம்பத்தில் சிறிய ஏற்ற, இறக்கங்களை சந்தித்த நிப்டி பேங்க் 10 மணிக்கு மேல் ஏற ஆரம்பித்து, அதன் பின்னர் தொடர் ஏற்றத்தை சந்தித்து, நாளின் இறுதியில் 241 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9): 56.64, ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14, சி.எல்.,): 58.10 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12,சி.எல்.,): 0.80 என்ற அளவில் இருக்கின்றன. 55,460 என்ற அளவுக்கு கீழே இறங்காமல் இருந்தால் ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது.