டெக்னிக்கல் அனாலிசிஸ் : எப் அண்டு ஓ., ஒப்பந்த நிறைவின் தாக்கம் தெரியும்
டெக்னிக்கல் அனாலிசிஸ் : எப் அண்டு ஓ., ஒப்பந்த நிறைவின் தாக்கம் தெரியும்
ADDED : நவ 25, 2025 12:18 AM

நிப்டி
சிறிய ஏற்றத்துடன் ஆரம் பித்து, தொடர்ந்து நடந்துவந்த நிப்டி, இரண்டு மணிக்குமேல் இறங்க ஆரம்பித்து, மூன்று மணியளவில் கணிசமாக இறங்கி, நாளின் இறுதியில் 108 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் அனைத்துமே இறக்கத்துடன் நிறைவடைந்தன.
இவற்றில் 'நிப்டி மிட்கேப்100' குறியீடு, குறைந்தபட்சமாக 0.32 சதவிகித இறக்கத்துடனும்; 'நிப்டி ஸ்மால்கேப்100' குறியீடு அதிகபட்சமாக 0.85 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில், இரண்டு குறியீடுகள் மட்டும் ஏற்றத்துடனும்; 17 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இதில் 'நிப்டி மிட்ஸ்மால் ஐ.டி., அண்டு டெலிகாம்' குறியீடு அதிகபட்சமாக 0.47 சதவிகித ஏற்றத்துடனும்; நிப்டி ரியால்ட்டி குறியீடு அதிக பட்சமாக 2.05 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
வர்த்தகம் நடந்த 3,214 பங்குகளில், 810 ஏற்றத்துடனும்; 2,315 இறக்கத்துடனும்; 89 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. ஏற்றம் தொடர்வதற்கான சாத்தியக்கூறுகளை, ஒரு சில டெக்னிக்கல் இண்டிகேட்டர்கள் காட்டுகிற போதிலும், நிப்டி 25,850 எனும் சப்போர்ட்டிற்கு மேலேயே வர்த்தகமானால் மட்டுமே இது சாத்தியம். இன்று நவம்பர் மாத எப் அண்டு ஓ., ஒப் பந்தங்கள் நிறைவு பெறுவதால், அதற்கேற்ற நடவடிக்கைகளையே சந்தையில் எதிர்பார்க்கலாம்.
நிப்டி பேங்க்
ஆரம்பத்தில் சிறிய ஏற்றத்தில் ஆரம்பித்த நிப்டி பேங்க், நண்பகலில் ஓரளவு ஏற்றத்தை சந்தித்து, மூன்று மணிக்கு இறங்க ஆரம்பித்து, நாளின் இறுதியில் 32 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. நிப்டி பேங்க், கண்டு மீளும் சிறுசிறு இறக்கங்களெல்லாம் வலுப் பெற்று வருவதையே காட்டுகிறது. 58,200-க்கு கீழே போகாத வரை, ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது எனலாம். தற்போதைய நிலையிலிருந்து வால்யூமுடன் கூடிய வேகமான ஏற்றம் துவங்கினால் மட்டுமே, 59,400 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.
குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு
நிப்டி 26,122.80 26,142.80 25,912.15 25,959.50
நிப்டி பேங்க் 58,996.90 59,309.90 58,649.50 58,835.35
ஆதரவு 25,860 25,770 25,680
தடுப்பு 26,090 26,230 26,310
ஆதரவு 58,540 58,260 58,010
தடுப்பு 59,200 59,580 59,830

