டெக்னிக்கல் அனாலிசிஸ் : இறக்கம் தொடர்வதற்கான வாய்ப்பு சற்றே குறைவு
டெக்னிக்கல் அனாலிசிஸ் : இறக்கம் தொடர்வதற்கான வாய்ப்பு சற்றே குறைவு
UPDATED : டிச 03, 2025 12:55 AM
ADDED : டிச 03, 2025 12:38 AM

நிப்டி
இறக்கத்தில் ஆரம்பித்த நிப்டி, தொடர்ந்து இறங்கி, நாளின் இறுதியில் 143 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் அனைத்துமே இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மிட்கேப் 150' குறியீடு குறைந்தபட்சமாக 0.20 சதவிகித இறக்கத்துடனும்; 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு, அதிகபட்சமாக 0.58 சதவிகித இறக்கத்துடன் நிறைவடைந்தது. 19 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில், 4 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 15 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இதில், 'நிப்டி மிட்ஸ்மால் ஹெல்த்கேர்' குறியீடு, அதிகபட்சமாக 0.28 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி பைனான்சியல் சர்வீசஸ் 25/50 குறியீடு' அதிகபட்சமாக 0.78 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,202 பங்குகளில், 1,083 ஏற்றத்துடனும்; 2,007 இறக்கத்துடனும்; 112 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. இறக்கம் தொடரும் என்று சொல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிற போதிலும், நிப்டி ஏற்றம் பெறுவதற்கான குறுகிய கால சக்தியானது சற்று குறைந்துள்ளது. 20 மற்றும் 50 நாள் சாராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) மேலே இருக்கும் வரையில் பெரிய அளவிலான இறக்கத்திற்கான வாய்ப்பு குறைவு எனலாம். தற்போதைய சூழ்நிலையில் 26,060 என்பது ஒரு திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
நிப்டி பேங்க்
ஆரம்பத்தில் இறக்கத்தில் துவங்கிய நிப்டி பேங்க், தொடர்ந்து இறக்கத்தை சந்தித்து, நாளின் இறுதியில் 407 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. குறுகிய காலத்தில் நிப்டி பேங்க் குறியீட்டில் கன்சாலிடேஷன் நடக்க வாய்ப்புள்ளது. இதற்கிடையே, செய்திகள் சாதகமாக இல்லாவிட்டால், 21 நாட்கள் சராசரியான (இ.எம்.ஏ.,) 58,810 வரை இறங்கி மீள்வதற்கான வாய்ப்பும் உள்ளது.






