டெக்னிக்கல் அனாலிசிஸ்: மீள்வதில் இருந்த வேகம் ஏற்றம் தொடர்வதில் இல்லை
டெக்னிக்கல் அனாலிசிஸ்: மீள்வதில் இருந்த வேகம் ஏற்றம் தொடர்வதில் இல்லை
UPDATED : டிச 20, 2025 02:08 AM
ADDED : டிச 20, 2025 02:04 AM

ஆரம்பத்தில் இருந்தே ஏற்றத்தில் நடைபெற்ற நிப்டி வர்த்தகம், நாளின் இறுதியில் 150 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

வர்த்தகம் நடந்த 3,214 பங்குகளில் 2,184 ஏற்றத்துடனும்; 938 இறக்கத்துடனும்; 92 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டி 25,900 என்ற லெவலுக்கு மேலே இருக்கும்வரை பெரிய இறக்கம் வருவதற்கான வாய்ப்பு குறைவே. 25,850-க்கு கீழே சென்றால் 25,600 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. இறக்கத்தில் இருந்து மீழும் வேகம் அதிகமாக இருக்கும் நிலைமையிலும்கூட வேகமான ஏற்றம் தொடர்வதற்கு, தொடர்ந்து செய்திகள் சாதகமாக இருக்க வேண்டும்.

