தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிஸ்: 26,200-க்கு மேலே போனால் மட்டுமே ஏற்றம் தொடரும்

டெக்னிக்கல் அனாலிசிஸ்: 26,200-க்கு மேலே போனால் மட்டுமே ஏற்றம் தொடரும்

டெக்னிக்கல் அனாலிசிஸ்: 26,200-க்கு மேலே போனால் மட்டுமே ஏற்றம் தொடரும்


UPDATED : டிச 30, 2025 02:29 AM

ADDED : டிச 30, 2025 02:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 30, 2025 02:29 AM ADDED : டிச 30, 2025 02:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆரம்பத்தில் சிறிது நேரம் ஏற்றத்தில் இருந்த நிப்டி, 10 மணியளவில் இறங்க ஆரம்பித்து, நாள் முழுவதுமே சிறிது சிறிதாக இறங்கி, நாளின் இறுதியில் 100 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளு-ம் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி 100' குறியீடு குறைந்தபட்சமாக 0.40 சதவிகித இறக்கத்துடனும்; 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 0.87 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 3 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 16 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மீடியா' குறியீடு அதிகபட்சமாக 0.93 சதவிகித ஏற்றத்துடனும் 'நிப்டி கன்ஸ்யூமர் டியுரபிள்ஸ்' குறியீடு அதிகபட்சமாக 0.91 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

Image 1514860வர்த்தகம் நடந்த 3,293 பங்குகளில், 1,022 ஏற்றத்துடனும்; 2,185 இறக்கத்துடனும்; 86 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. மீண்டும் கன்சாலிடேஷன் நடப்பதைப் போன்ற டெக்னிக்கல் தோற்றமே தெரிகிறது. 'மொமென்டம் இண்டிகேட்டர்கள்' நிப்டி பெரிய அளவிலான மாறுதலை சந்திக்காமல் வர்த்தகமாகும் என்பதைப் போன்ற நிலைமையை காட்டுகிறது.

Image 1514861இருப்பினும், டிசம்பர் மாத எப் அண்டு ஓ., எக்ஸ்பயரி இருப்பதால், அதற்கான நகர்வை எதிர்கொண்டு, டெக்னிக்கல் லெவல்கள் வேலை செய்யாமல் போய்விடவும் வாய்ப்புள்ளது. தற்போதைய சூழ்நிலையில் 26,200-க்கு மேலே போனால் மட்டுமே ஏற்றம் தொடரும் என்று கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us