டெக்னிக்கல் அனாலிசிஸ் மீண்டும் ஒரு ஏற்றத்துக்கு தயாராகும் சூழல்
டெக்னிக்கல் அனாலிசிஸ் மீண்டும் ஒரு ஏற்றத்துக்கு தயாராகும் சூழல்
ADDED : நவ 21, 2025 01:14 AM

நிப்டி
ஆரம்பம் முதலே ஏற்றத்துடன் நடைபெற்ற நிப்டி, நாளின் இறுதியில், 139 புள்ளிகள்
ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 17 பரந்த சந்தை குறியீடுகளில், 10 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 6 குறியீடுகள் இறக்கத்துடனும், 1 மாற்றம் ஏதுமின்றியும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி100' குறியீடு அதிகபட்சமாக 0.43 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி மிட்கேப்100' குறைந்தபட்சமாக 0.02 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.
'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு, அதிகபட்சமாக 0.32 சதவீத இறக்கத்துடன் நிறைவடைந்தது. 19 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில், 8 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 10 குறியீடுகள் இறக்கத்துடனும், 1 மாற்றம் ஏதுமின்றியும் நிறைவடைந்தன. இதில் 'நிப்டி பைனான்சியல் சர்விசஸ்-எக்ஸ் பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 0.89 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி மீடியா' குறியீடு அதிகபட்சமாக 1.54% இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
வர்த்தகம் நடந்த 3,199 பங்குகளில், 1,383 ஏற்றத்துடனும்; 1,714 இறக்கத்துடனும்; 102 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. தற்போதைய ஏற்றத்துக்கு பிறகு நிப்டி மீண்டும் ஒரு ஏற்றத்துக்கு தயாராக உள்ளதைப் போன்ற சூழல் தெரிகிறது. 26,100-க்கு கீழே போகாமல் வர்த்தகமானால் இதை உறுதிசெய்துகொள்ளலாம். அப்படியே கீழே சென்றாலுமே சிறிய இறக்கங்கள் காணலாமே தவிர டிரெண்ட் மாறிவிட்டது என்று நினைக்கவேண்டியதில்லை.
நிப்டி பேங்க்
நண்பகல் வரை சிறிய இறக்கத்துடன் நடைபெற்ற நிப்டி பேங்க், அதன் பின் ஏற்றம் கண்டு, நாளின் இறுதியில் 131 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சற்றே 'ஓவர் பாட்' என்ற நிலைமை உருவாகியுள்ளது. டெக்னிக்கலாக தற்சமயம் சிறிய இளைப்பாறுதலுக்கு வாய்ப்புண்டு. இருப்பினும், ஒட்டுமொத்த சந்தையின் சென்டிமென்ட் பாசிட்டிவ்வாக இருந்தால், இளைப்பாற வாய்ப்பில்லை. 59,500-க்கு மேல் சென்றால் நல்லதொரு ஏற்றம் காண வாய்ப்பு உள்ளது.

