டெக்னிக்கல் அனாலிசிஸ் :ஏற்றம் தொடர்வதற்கான டெக்னிக்கல் சூழல் தென்படுகிறது ஏற்றம் தொடர்வதற்கான டெக்னிக்கல் சூழல் தென்படுகிறது
டெக்னிக்கல் அனாலிசிஸ் :ஏற்றம் தொடர்வதற்கான டெக்னிக்கல் சூழல் தென்படுகிறது ஏற்றம் தொடர்வதற்கான டெக்னிக்கல் சூழல் தென்படுகிறது
UPDATED : பிப் 04, 2026 02:07 AM
ADDED : பிப் 04, 2026 02:02 AM

ஆரம்பத்தில் இருந்தே ஏற்றத்தில் நடைபெற்ற நிப்டி வர்த்தகம், நாளின் இறுதியில் 639 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ம் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 3.72 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி100' குறியீடு குறைந்தபட்சமாக 2.56 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி ரியால்டி' குறியீடு அதிகபட்சமாக 4.79 சதவீத ஏற்றத்துடனும்; நிப்டி எப்.எம்.சி.ஜி., குறியீடு குறைந்த பட்சமாக 0.36 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வர்த்தகம் நடைபெற்ற 3,315 பங்குகளில், 2,691 ஏற்றத்துடனும்; 533 இறக்கத்துடனும்; 91 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டி 20, 50, 200 நாள் சராசரிகளை (இ.எம்.ஏ.,) ஒரே பாய்ச்சலாக தாண்டிவிட்டது. ஆர்.எஸ்.ஐ., - எம்.ஏ.சி.டி., - ஆர்.ஓ.சி., போன்றவை ஏற்றத்துக்கு தயாரான சூழ்நிலையை காட்டுகின்றன. டெக்னிக்கலாக புல்லிஷாக இருக்கும் தற்போதைய சூழலில், செய்திகள் சாதகமாக இருந்தால், 26,100 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. அப்படி இல்லாத பட்சத்தில், சிறிய அளவிலான இறக்கம் வந்து போக வாய்ப்புள்ளது.






