டெக்னிக்கல் அனாலிசிஸ் : குழப்பமாக தென்படும் நிப்டியின் டெக்னிக்கல் சூழல்
டெக்னிக்கல் அனாலிசிஸ் : குழப்பமாக தென்படும் நிப்டியின் டெக்னிக்கல் சூழல்
UPDATED : ஆக 15, 2026 03:01 AM
ADDED : ஆக 15, 2026 02:57 AM

நேற்று 33 புள்ளிகள் இறக்கத்துடன் தொடங்கிய நிப்டி, பின்னர் 92 புள்ளிகள் வரை சரிந்தது. நாளின் இறுதியில் 29 புள்ளிகள் குறைந்து முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18-ல் 1 குறியீடு ஏற்றத்துடனும்; 17 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
'நிப்ட் மைக்ரோகேப் 250' குறியீடு மட்டும் 0.08 சதவீத உயர்வுடன் முடிந்தது. 'நிப்டி 100' குறியீடு குறைந்தபட்சமாக 0.16 சதவீத சரிவுடனும், 'நிப்டி மிட்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 0.74 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 3 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 18 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
இவற்றில், 'நிப்டி மெட்டல்' குறியீடு அதிகபட்சமாக 0.96 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி பைனான்சியல் சர்வீசஸ் எக்ஸ்-பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 1.02 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,461 நிறுவனங்களின் பங்குகளில் 1,479 ஏற்றத்துடனும்; 1,855 இறக்கத்துடனும்; 127 மாற்றம் ஏதும் இல்லாமலும் முடிவடைந்தன.
நிப்டி 14 மற்றும் 200 நாள் சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) கீழே நிறைவடைந்துள்ளது குறுகிய காலத்தில் ஏற்றம் காண தடைகள் அதிகம் இருக்கிறது என்பதை காட்டுகிறது. இருப்பினும் 21 மற்றும் 100 நாள் சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) மேலே இருப்பது கலவையான டெக்னிக்கல் அமைப்பையே காட்டுகிறது.
மொமென்டம் இண்டிக்கேட்டர்களில் ஆர்.எஸ்.ஐ., 52.21 என்ற அளவில் நியுட்ரலான நிலையில் இருக்கிறது. ஸ்டோக்காஸ்ட்டிக் ஆசிலேட்டர் 35.06 என்ற அளவிற்கு குறைந்திருப்பது குறுகிய காலத்தில் வாங்கும் போக்கு குறைந்துள்ளதை காட்டுகிறது.
எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் -15.32 என்ற எதிர்மறை நிலையில் இருப்பது, மொமென்டம் பலவீனமடைந்து வருவதற்கான அறிகுறியாக உள்ளது. எனவே, நிப்டி குறுகிய அளவிலான ஏற்ற இறக்கங்களுடன் இறக்கத்திற்கு சாதகமான சூழலில் வர்த்தகமாகவே வாய்ப்புள்ளது எனலாம்.
நிப்டிக்கு 24,385 - 24,410 லெவல்களில் உடனடி ரெசிஸ்டென்சும், 24,355ல் உடனடி சப்போர்ட்டும் கிடைக்க வாய்ப்புள்ளது. 24,410க்கு மேலே சென்றால் 24,535 வரை செல்ல வாய்ப்புள்ளது. 24,355க்கு கீழே சென்றால் 24,190வரை செல்லக்கூடும்.
