டெக்னிக்கல் அனாலிசிஸ்: ஏற்றம் தொடரக்கூடும் என எதிர்பார்க்கலாம்
டெக்னிக்கல் அனாலிசிஸ்: ஏற்றம் தொடரக்கூடும் என எதிர்பார்க்கலாம்
UPDATED : பிப் 24, 2026 01:49 AM
ADDED : பிப் 24, 2026 01:44 AM

காலையில் ஏற்றத்தில் ஆரம்பித்து நடைபெற்ற நிப்டி, பிற்பகல் 2:00 மணியளவில் ஏற்றம் கண்ட புள்ளிகளில் சிலவற்றை இழந்து அதன்பின் மீண்டும் வேகமான ஏற்றம் கண்டு நாளின் இறுதியில், 141 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் 13 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 3 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,278 பங்குகளில் 1,494 ஏற்றத்துடனும்; 1,672 இறக்கத்துடனும்; 112 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி 20 மற்றும் 50 நாள் சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) சற்று மேலே வர்த்தகமாகிறது. மொமெண்டம் இண்டிகேட்டர்கள் சிறியதொரு ஏற்றத்துக்கான சூழலை காட்டுகின்றன.
டெக்னிக்கலாக ஏற்றத்துடன் கூடிய கன்சாலிடேஷன் நடக்க வாய்ப்புள்ளது. நிப்டி 25,650-க்கு மேல் இருக்கும் வரை ஏற்றம் தொடரவே வாய்ப்புள்ளது. 25,750-க்கு மேலே செல்லும் பட்சத்தில், 26,000 என்ற எல்லை வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

