தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிஸ் : சிறியளவில் திடீர் ஏற்றம் வரவும் வாய்ப்பு உள்ளது

டெக்னிக்கல் அனாலிசிஸ் : சிறியளவில் திடீர் ஏற்றம் வரவும் வாய்ப்பு உள்ளது

டெக்னிக்கல் அனாலிசிஸ் : சிறியளவில் திடீர் ஏற்றம் வரவும் வாய்ப்பு உள்ளது


UPDATED : ஜூன் 20, 2026 02:54 AM

ADDED : ஜூன் 20, 2026 02:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 20, 2026 02:54 AM ADDED : ஜூன் 20, 2026 02:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நேற்று வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே நிப்டி இறக்கத்துடன் காணப்பட்டது. வர்த்தக நிறைவில், 154 புள்ளிகள் வீழ்ச்சியுடன் முடிந்தது. 18 பரந்த சந்தை குறியீடுகளில் 11 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 7 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 0.80 சதவீத உயர்வுடனும் 'நிப்டி 100' குறியீடு அதிகபட்சமாக 0.58 சதவீத சரிவுடனும் முடிந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 9 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 12 குறியீடுகள் இறக்கத்துடனும்; நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி மிட்ஸ்மால் ஹெல்த்கேர்' குறியீடு அதிகபட்சமாக 1.13 சதவீதம் அதிகரித்தும், நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 3.65 சதவீதம் குறைந்தும் முடிவடைந்தன. 154 புள்ளிகள் இறக்கத்துக்கு பின்னருமே டெக்னிக்கலாக பெரிய மாற்றம் ஏதும் வந்துவிடவில்லை.

Image 1589817


இன்னமும் நிப்டி குறுகிய கால சராசரிகளுக்கு மேலேயே இருக்கிறது. மொமென்டம் இண்டிகேட்டர்கள் ஏற்றத்திற்கு சாதகமாகவும், ஸ்டொக்காஸ்ட்டிக் இண்டிகேட்டர் சற்று 'ஓவர் பாட்' ஆகவுமே தொடர்கிறது. 23,900த்திற்கு கீழே செல்லாதவரை திடீரென்று சிறியதொரு ஏற்றம் வந்துவிடுவதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

ஏற்றம் வந்தால் 24,100 மற்றும் 24,250ல் வலுவான ரெசிஸ்டென்ஸை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 23,900 தாண்டி இறங்கினால் 23,800 மற்றும் 23,700 என்ற லெவல்களில் சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது.

நிப்டி 23,900 புள்ளிகளுக்கு கீழே சென்றால் மட்டுமே டெக்னிக்கல் சூழல் மாறுபடுவதற்கான வாய்ப்பு உள்ளது. செய்திகளே அடுத்த கட்ட நகர்வுகளை நிர்ணயிக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us