டெக்னிக்கல் அனாலிசிஸ்: திடீரென ஒரு ஏற்றம் வந்து போக வாய்ப்பு உள்ளது
டெக்னிக்கல் அனாலிசிஸ்: திடீரென ஒரு ஏற்றம் வந்து போக வாய்ப்பு உள்ளது
UPDATED : ஆக 29, 2026 03:05 AM
ADDED : ஆக 29, 2026 02:54 AM

நேற்று 31 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கிய நிப்டி, பெரிய அளவிலான இறக்கம் எதையும் சந்திக்காமல் ஏற்றம் கண்டு நாளின் இறுதியில் 84 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18-ல் 16 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 1 குறியீடு இறக்கத்துடனும்; 1 குறியீடு மாற்றம் ஏதுமின்றியும் நிறைவடைந்தன.
![]() |
இவற்றில், 'நிப்டி ஸ்மால்கேப் 250' குறியீடு அதிகபட்சமாக 0.34 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 0.06 சதவீத இறக்கத்துடனும் முடிந்தது. 'நிப்டி மிட்கேப் 150' குறியீடு மாற்றம் ஏதுமின்றி நிறைவடைந்தது. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 11 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 10 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 3.51 சதவீத உயர்வுடனும், 'நிப்டி கெமிக்கல்ஸ்' குறியீடு அதிகபட்சமாக 0.70 சதவீத சஎஇவுடன் முடிவடைந்தன. என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,603 நிறுவனங்களின் பங்குகளில் 1,917 ஏற்றத்துடனும்; 1,560 இறக்கத்துடனும்; 126 மாற்றம் ஏதும் இல்லாமலும் காணப்பட்டன.
நாளின் இறுதியில் ஏற்றத்துடன் நிறைவடைந்த போதிலும், நிப்டியின் தற்போதைய டெக்னிக்கல் அமைப்பு பெரிய ஏற்றத்திற்கான அறிகுறிகளை காட்டாமல், பக்கவாட்டு அல்லது சற்று இறக்கத்திற்கான வாய்ப்பையே காட்டுகிறது.
அனைத்து முக்கிய சராசரிகளுக்கும் (இ.எம்.ஏ.,க்கள்) கீழே நிறைவடைந்துள்ள நிப்டியின் ஆர்.எஸ்.ஐ., 46.98, எம்.ஏ.சி.டி., -12.46 மற்றும் ஆர்.ஓ.சி., -1.07 என்ற அளவில் இருப்பது நிப்டியின் மொமென்டம் பலவீனமாக இருப்பதையே காட்டுகிறது.
ஸ்டோக்காஸ்ட்டிக் சிறிய ஏற்றத்திற்கு வாய்ப்பிருப்பதை காட்டுகிறபடியால் சட்டென்று வரக்கூடிய சிறிய ஏற்றத்திற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும், இது உறுதியாக நடக்கும் என்று சொல்லக்கூடிய அளவிலான பல விஷயங்கள் ஊர்ஜிதமாகமலேயே இருக்கின்றன. 24,000 என்பது உடனடி சப்போர்ட்டாகவும், 24,200 உடனடி ரெசிஸ்டென்ஸாகவும் இருக்கின்றன.
சப்போர்ட்டை உடைத்து கீழே சென்றால் 23,920 வரையிலும், ரெசிஸ்டென்ஸை தாண்டி மேலே சென்றால் 24,260 வரையிலும் செல்ல வாய்ப்புள்ளது. 24,385-ஐ தாண்டி நிலைத்தால் மட்டுமே ஏற்றம் தொடர்வதற்கான வலுவான வாய்ப்பு உருவாகும்.

